பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் .....
இன்று 34 ஆவது நாள், ஆனி 27 ( 11.07.2017) செவ்வாய்க் கிழமை.
குழந்தை வேலன் சந்நிதியில் இருந்து அதிகாலை மணி 2.20க்கு வழக்கம்போல் வழிபாடு செய்து ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.
யாத்திரிகர் காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களுக்குச் சளி. மூச்சுவிடவே மிகவும் சிரமப் பட்டார். எனினும் மிகவும் தைரியமாக நடந்து வந்தார். ஒட்டன்சத்திரத்தைக் கடந்து வேடசந்தூர் சாலையில் பயணிக்கும் போது மூச்சுவிடவும் நடக்கவும் மிகவும் சிரமப்பட்டார். மற்றபிற யாத்திரிகர் அனைவரும் வெகுதூரம் சென்று விட்டனர்.
🙏🙏🙏 காசிஶ்ரீ அங்கமுத்து ஐயா அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த படியால் அவருடன் காசிஸ்ரீ முரளிதரன் அவர்களும் சேர்ந்து மெதுவாக நடந்து வந்தனர்.
முருகன் அருளால் ஒட்டன்சத்திரத்தில் உள்ள வேடசந்தூர் செல்லும் சாலை சந்திப்பில் எங்களுக்காக காத்திருந்த குருஜி மற்றும் யாத்திரிகர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் நாங்களும் சேர்ந்தோம். எங்களை கண்ட உடனே குருஜி மற்றும் யாத்திரிகர்கள் மேலும் யாத்திரையைத் தொடர ஆயத்தம் ஆனார்கள். அப்போது காசிஶ்ரீ அங்கமுத்து ஐயா அவர்கள் குருஜியிடம் நீங்கள் அனைவரும் புறப்படுங்கள், நான் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு முரளி ஐயாவுடன் நடந்து வருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

எனவே காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களுடன் காசிஸ்ரீ முரளிதரன் அவர்கள் உடனிருக்க, மற்ற அனைவரும் யாத்திரையைத் தொடர்ந்தனர்.
நேரம் செல்ல செல்ல அங்கமுத்து அவர்களின் உடல்நிலை மேற்கொண்டு ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத நிலைக்கு சென்று விட்டது. அவரை சாலையோரம் இருந்த ஒரு கோயிலில் படுக்க வைத்து விட்டு நாங்கள் இருக்கும் இடத்தையும் நிலையும் பற்றியும் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு முரளிதரன் அவர்கள் தகவல் சொன்னார். அவர் ஒரு நிமிடம் கழித்து மீண்டும் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் முரளிதரனைத் தொடர்பு கொண்டு காசிஶ்ரீதனசேகர் ஐயா அவர்கள் உங்களுக்கு மிக அருகில் தான் உங்களுக்காக காத்து இருக்கிறார், நீங்கள் இருவரும் எப்படியாவது அவர் இருக்கும் இடத்திற்கு போய்விடுங்கள், மற்றதை காசிஶ்ரீதனசேகர் ஐயா பார்த்து கொள்வார் என்று சொன்னார். காசிஶ்ரீ அங்கமுத்து விடம் காசிஸ்ரீ முரளிதரன் சென்று ஐயா இன்னும் சிறிது தூரம் நடக்க முயற்சி சொய்வோம், வாங்கள் ஐயா என்று அழைத்துள்ளார். குடிக்க சொடா வாங்கி கொடுங்கள் கொஞ்சம் காற்று பிரிந்தால் நடக்க இயலும் என்று சொல்ல, உடனே அங்கே இருந்தவர்களிடம் இங்கு சோடா கடை பற்றி விசாரித்தபோது அவர்கள் எதிர்புறம் பூட்டி கிடந்த கடையை காட்டி இன்னும் இங்கு தான் கிடைக்கும் என்றார்கள். காசிஸ்ரீ முரளிதரன் அடியேன் தயங்கி நின்ற போது, அவர்கள் சென்று கடையின் கதவை தட்டி கடைகாரரிடம் என் நிலையை எடுத்து சொல்லி சோடா வாங்கி கொடுத்தார்கள்.
காசிஸ்ரீ அங்கமுத்து சாமிகள் சோடா குடித்து விட்டு சரி நடக்கலாம் வாங்கள் என்றார். குருசாமி சொன்னபடி காசிஶ்ரீதனசேகர் ஐயா அவர்கள் மிக அருகில் எங்களுக்காக காத்து இருந்தார். பிறகு அடியேனும் காசிஶ்ரீதனசேகர் ஐயாவும் சேர்ந்து அவருக்கு மனதளவில் தைரியம் வரவைத்து மேலும் சிறிதுதூரம் நடக்க வைத்து அவரை எப்படியோ ஒரு பேருந்து நிறுத்தம் வரை கூட்டி வந்தோம். அப்போது காசிஶ்ரீ அங்கமுத்து அவர்கள் பேசுவதற்கு கூட முடியாத நிலையில் இருந்த படியால் அடியேன் காசிஶ்ரீதனசேகர் ஐயாவிடம் இவரை மருத்துவமனை கூட்டி செல்வதை தவிர வேறு வழி இல்லை என்றவுடன் அவர் குருஜியிடம் தகவல் சொல்லி விட்டு, காசிஸ்ரீ முரளிதரன் அவர்களுனும், காசிஶ்ரீதனசேகரன் அவர்களும், மற்றும் காசிஶ்ரீ அங்கமுத்து ஐயா மூவரும் எங்களது மொத்த யாத்திரை தூரமான சுமார் 1200 கி.மீட்டரில் 15கி.மீட்டார் தூர்த்தை பேருந்தில் கடந்து,

வேடசந்தூரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வைத்தியம் செய்து அன்று வேடசந்தூரில் நாங்கள் தங்கும் கோயிலுக்கு கூட்டி வந்து காசிஶ்ரீ அங்கமுத்து ஐயாவை ஓய்வு எடுக்க செய்தோம்..
இது ஒருவிதமா அனுபவமாக அமைந்தது.
காசிஸ்ரீ முரளிதரன் அவர்களுக்கும்
காசிஸ்ரீ தனசேகரன் அவர்களுக்கும்
யாத்திரிகர் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
இது ஒருவிதமா அனுபவமாக அமைந்தது.
காசிஸ்ரீ முரளிதரன் அவர்களுக்கும்
காசிஸ்ரீ தனசேகரன் அவர்களுக்கும்
யாத்திரிகர் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
🙏🙏🙏
சுள்ளெரும்பு ஊரில் சாலையோரம் உள்ள கோயில் வளாகத்தில் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
வேடசந்தூர் அருள்மிகு ஐயனாரப்பன் கோயிலுக்கு காலை மணி 9:00 க்கு வந்து சேர்த்தோம். கோயில் நிருவாகிகளும் பொதுமக்கள் சிலரும் வரவேற்று உபசரித்தனர்.
காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களை மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை அளித்த பின்னர், காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களைக் கோயிலுக்கு அழைத்து வந்தார்.
கோயிலில் காலை உணவு.
மாலைநேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் அடியார்கள் பலரும் குடும்பத்தினருடன் வந்திருந்து குருசாமி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
மாலைநேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் அடியார்கள் பலரும் குடும்பத்தினருடன் வந்திருந்து குருசாமி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
தங்கல்.
ஓய்வு .
https://goo.gl/maps/gCP5bgw3qfKA3WBM9
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக