அறுபடைவீடு - காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி 5) சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில், சிதம்பரம், பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் வழிபாடு செய்து கொண்டு நேற்றுமுன்தினம் பாண்டிச்சேரி ஸ்ரீ ஐயப்பன்கோயிலுக்கு வந்து தங்கி இருந்தோம்.
நேற்றும் பாண்டிச்சேரியிலேயே இருந்தோம்.
இன்று 53 ஆவது நாள், ஆடி 14 ( 30.07.2017) புதன் கிழமை.
இன்று அதிகாலை 4.15 மணிக்கு எழுந்து வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
4.30 மணிக்கு யாத்திரை தொடங்கியது.
வழியில் காலை 7.00 மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு நடந்தோம்.
நெடுஞ்சாலையிலில் இருந்து தைலாபுரத்திற்குச் சாலை பிரியும் இடத்தில் காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களும், அன்னதான வண்டி ஓட்டுநர் திரு ஆறுமுகம் அவர்களும் நின்று யாத்திரிகர்களை இருகரம் கூப்பி இன்முகம் காட்டி வரவேற்றனர்.
காலை மணி 9.50க்கு தைலாபுரம் தனலட்சுமி கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம். இந்த மண்டபத்தைக் காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
10.30 மணிக்குக் காலைச் சிற்றுண்டி.
ஓய்வு.
மதியம் 2.15 மணிக்கு மதிய உணவு.
திரும்பி வரும் வழியில் அருள்மிகு ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்வாச பெருமாள் திருக்கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டேன்.
ஊரின் எல்லையில் இடுகாடு உள்ளது. இங்கே ஒரு காவல் தெய்வம் உள்ளது. கீழே எழுத்துக்கள் இருந்தன. இந்தத் தெய்வத்தைக் கிராமமக்கள் பெரிதும் பயபக்தியுடன் வழிபடுகின்றனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு காசிஸ்ரீ தொப்பை அவர்களது மகனுடன் இருசக்கர வாகனத்தில் கிளியனூர் சென்று வழிபாடு செய்து கொண்டேன்.
பழமையான சிற்பங்களும் இருந்தன.
திரும்பி வரும் வழியில் அருள்மிகு ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்வாச பெருமாள் திருக்கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டேன்.
ஊரின் எல்லையில் இடுகாடு உள்ளது. இங்கே ஒரு காவல் தெய்வம் உள்ளது. கீழே எழுத்துக்கள் இருந்தன. இந்தத் தெய்வத்தைக் கிராமமக்கள் பெரிதும் பயபக்தியுடன் வழிபடுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக