திங்கள், 27 ஜூலை, 2020

28.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 51 ஆவது நாள், ஆடி 12

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு, நேற்று கடலூர் திரு முத்தையா அவர்களது இல்லத்திற்கு வந்து தங்கி இருந்தோம்.

இன்று 51 ஆவது நாள், ஆடி 12 ( 28.07.2017) வெள்ளிக் கிழமை.
அதிகாலை 2.30 மணிக்கு யாத்திரை தொடங்கியது.  
புதுச்சேரியை நோக்கி நடந்தோம்.

புதுச்சேரி நகரில் நுழைந்தவுடன் காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்கள் யாத்திரிகர்களுக்கு இளநீர் வழங்கி சிறப்புச் செய்து உபசரித்தார்.

2கி.மீ. தூரம் நடந்தவுடன், போண்டா சட்னி தேநீர் அளித்து அடியார்களை மகிழ்வித்தார்.







ஐயா அப்துல்கலாம் அவர்களது படத்தைப் பார்த்து வணங்கிக் கொண்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.


7.30 மணிக்குப் புதுவை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தை அடைந்தோம்.

காலைச் சிற்றுண்டி 9.00 மணிக்கு அன்பர்களின் உபயம்.
ஓய்வு 
மதிய உணவு
ஓய்வு


ஓலைச்சுவடிச் சித்தர் ஐயா அண்ணாமலை சுகுமாரன் அவர்கள் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசிபெற்றார்.

மாலை 5.30 மணிக்கு மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்றோம்.

மணக்குள விநாயகர் கோயில் யானைக்குக் குருசாமி அவர்கள் பிரசாதம் வழங்கினார்.



அருள்மிகு மணக்குள விநாயகர் ஆலய தரிசனம்.  
அன்பர் பொறியாளர் சத்தியமூர்த்தி அவர்கள் சிறப்பு வழியில் சென்று அருள்மிகு மணக்குள விநாயகரைக் கண்ணாரத் தரிசித்தோம்.  பிறகு உற்சவர் சந்நிதியில் சென்று உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்தோம்.  அனைவருக்கும் வெண்பொங்கல் பிரசாம் வழங்கப்பட்டது.  பக்தர்கள் திரளாக வந்திருந்து சுவாமிகளை வணங்கி ஆசியும் விபூதிப் பிரசாதமும் பெற்றுச் சென்றனர்.  அடியார் பெருமக்கள் அனைவரும் சுவாமிகள் அபிஷேக விபூதிப் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். 

அங்கிருந்து நேரே அருள்மிகு ஐயப்பசுவாமி சந்நிதி வந்து,  அருள்மிகு சபரிமலை ஐயப்பனைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.

ஐயப்பன் கோயிலுக்குக் கீழே தங்கி யிருந்த மண்டபத்தில் தங்கல்.
இரவு வழிபாடு.
ஓய்வு.
















https://goo.gl/maps/RZzdtzkFwbTmjBoy5
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக