இராமேசுவரம் - காசி பாதயாத்திரை -
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 39ஆம் நாள் - ஆனி 19 (03.07.2014) வியாழக் கிழமை.
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று பெரச்சந்திரா வந்து சேர்ந்து இருந்தோம்.
இன்று அதிகாலை 2.45 மணிக்கு தினசரி வழிபாடு முடிந்தவுடன் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு, பெரச்சந்திராவில் இருந்து புறப்பட்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தோம். பரகோடு வழியாக பாகேபள்ளிக்கு காலை மணி 10.15 க்கு வந்து சேர்ந்தோம். இன்றுடன் கர்நாடக எல்லை முடிகிறது. நாளையிலிருந்து ஆந்திரா மாநிலம் வழியாகப் பயணம் .
7.41 am
வரும் வழியில் பரகோடு பேருந்து நிறுத்தத்தில் காலை உணவு. அருகில் சில தொழிலாளர் தொலைத்தொடர்பு இணைப்பு பணிகள் செய்து கொண்டிருந்தனர், ஒரு முதியவரும் இருந்தார். அவர்களில் சிலர் திண்டுக்கல் என்றனர்.
8.11 am
குருஜி பச்சைக்காவடிஅவர்களையும் அழைத்து காலை உணவு வழங்கினார்.
8.29 am
8.45 am
8.54 am
9.16 am
9.34 am
9.39 am
9.45 am
9.51 am
கடுமையான வெயில்.
10.15 am
10.16 am
காலை மணி 10.15 அளவில் பாகேபள்ளி கீதாமந்திர் வந்து சேர்ந்தோம்.
மாடியில் தங்கிக் கொள்ள வசதி செய்து கொடுத்திருந்தனர். நன்கு வசதியாக காற்றோட்டமாகத் தங்கினோம்.
காலை மணி 10.15 அளவில் பாகேபள்ளி கீதாமந்திர் வந்து சேர்ந்தோம்.
மாடியில் தங்கிக் கொள்ள வசதி செய்து கொடுத்திருந்தனர். நன்கு வசதியாக காற்றோட்டமாகத் தங்கினோம்.
ஓய்வு.
11.22 am
குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும் பாகேபள்ளி சந்தைக்குச் சென்று காய்கறிகள் நிறைய வாங்கிக் கொண்டு கொடுத்தனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும் பாகேபள்ளி சந்தைக்குச் சென்று காய்கறிகள் நிறைய வாங்கிக் கொண்டு கொடுத்தனர்.
பாகேபள்ளி கீதாமந்திரில் மதிய உணவு .
ஓய்வு.
தங்கல்.
https://goo.gl/maps/KYGakGP4KMrLphVi8
இன்றைய பயணம் சுமார் சுமார் பயணம் 27 கீ.மீ .
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக