புதன், 8 ஜூலை, 2020

09.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 32ஆவது நாள், ஆனி 25

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  32ஆவது நாள், ஆனி 25 (09.07.2017) ஞாயிற்றுக் கிழமை.

பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு 08.06.2017 அன்று பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு நேற்று பழனி வந்து சேர்ந்து பிஎல். ஏ. மண்டபத்தில் தங்கி யிருந்தோம்.  
நேற்று இரவு பௌர்ணமி கிரிவலம்.

இன்று காலை யாத்திரிகர் அனைவரும் மலைமேல் ஏறினோம். மலைக் கோயிலில் சிறப்பு வழிபாடு. தரிசனத்திற்கு பழனி நகரத்தார்கள் ஏற்பாடுகள் கொடுத்தனர்.   மிகச் சிறப்பான தரிசனம்.  அடியார்களின் உள்ளமெல்லாம் பழனியாண்டவர் நிறைந்திருந்தார்.

மேற்குப் பார்த்துள்ள கோயில்கள் அனைத்துமே நோய்நீக்கி நீண்ட ஆயுளை அருளும் தன்மையுடையன.  பழனியாண்டவர் மேற்குப் பார்த்து நின்று அருளுகிறார்.   பிறவிப் பிணியையும் உடல்நோய்களையும் நீக்கி அருளுகிறார்.   எனது பிறவிப் பிணியும் உடற்பிணியும் நீங்கிடப் பழனியாண்டவரிடம் வேண்டிக் கொண்டேன்.

மதியம் ஓய்வு.

நாளை 10.7.17 அதிகாலை 3.00 மணிக்கு நான்காம் படைவீடான சுவாமிமலை நோக்கி யாத்திரை.....,

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக