புதன், 15 ஜூலை, 2020

16.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 39 ஆவது நாள், ஆனி 32

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் .....

இன்று  39 ஆவது நாள், ஆனி 32 ( 16.07.2017) ஞாயிற்றுக் கிழமை.
காலை மணி 6.00 அளவில் தினசரி வழிபாடு,
கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து கொள்ளுங்கள் எனக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அனுமதித்தார்.  யாத்திரிகர் பலரும் கோயிலுக்குச் சென்று வெக்காளியம்மனை வழிபட்டோம்.
காலை உணவு.
ஓய்வு.


குருசாமி அவர்கள் உறையூர்  சௌராஷ்டிர மகா ஜன சத்திரத்திற்கு வந்தருள வேண்டுமென அன்பர் சிலர் வந்து அழைத்தனர்.  குருசாமி அவர்களுடன் நாங்கள் சிலரும் சென்று வந்தோம்.


மதிய உணவு.
மதிய உணவிற்குப் பின்னர் ஏராளமான அன்பர்கள் வந்திருந்து குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுச் சென்றனர்.  அன்பர் பாலசுப்பிரமணியம் அவர்கள் அனைத்து யாத்திரிகர்களுக்கும் துண்டு போர்த்திச் சிறப்புச் செய்தார்.




யாத்திரையில் எவ்வாறு சொல், செயல், சிந்தனைகளால் பெருமை பெற வேண்டும் என அவரது அனுபவத்தின் வாயிலாகச் சொன்னது அனைத்து அடியார்களுக்கும் நல்ல பாடமாக இருந்தது.


நாங்கள் சிலர் மட்டும் மாலை நேரத்தில் உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் சென்று வழிபட்டோம்.
காசிஸ்ரீ பஞ்சவர்ணம் மற்றும் காசிஸ்ரீ சத்தியமூர்த்தி இவர்களுடன் நானும் எனது குடும்பத்தினரும் கோயிலில் வழிபாடு செய்து கொண்டோம்.



மாலைநேரத்தில் கார்த்திக் என்ற அன்பர் அவரது இல்லத்திற்குக் குருசாமி அவர்களையும் யாத்திரிகர்களையும் அழைத்துச் சென்று ரொட்டி சர்பத் வழங்கிச் சிறப்புச் செய்தார்.
இரவு உணவு.
ஓய்வு.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக