வெள்ளி, 17 ஜூலை, 2020

18.07.2014 காசி புனித பாதயாத்திரை - 54ஆம் நாள் - ஆடி 2

காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று வில்லியம்கொண்டா பள்ளிக்கூடம் வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.

இன்று 54ஆம் நாள் - ஆடி 2 (18.07.2014) வெள்ளிக் கிழமை.
அதிகாலை 3.00 மணிக்கு வழக்கம்போல் வழிபாடு செய்துவிட்டு, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.  காலை மணி 9.40 க்கு அட்டக்கல் என்ற ஊர் வந்து சேர்ந்தோம்.

3.43 am
மும்மலபள்ளி .
6.21 am
காலை 6.00  மணிக்கு கொத்தகொட்டா (Kothakota, Telangana 509381) என்ற ஊரில் காய்கறிகள் வாங்கிக்கொண்டோம். காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் காய்கறிகளை மூட்டையாகக் கட்டித் தூக்கிக் கொண்டனர்.  நானும் சிறிதுநேரமாவது தூக்கிவருகிறேன் என்று கேட்டுப் பார்த்தேன், கொடுக்க மறுத்து விட்டனர்.

6.31 am
காலை மணி 6.30 அளவில் சாலையோரம் உள்ள ஒரு சிவன்கோயிலில் வந்து தங்கி ஓய்வு எடுத்தோம்.





கோயில் அர்ச்சகர் கோயில் முழுவதையும் கழுவிச் சுத்தம் செய்து சிவலிங்கம் நந்தி இவற்றிற்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். யாத்திரிகர் சிலரும் வழிபாட்டில் கலந்துகொண்டோம். 

அன்னதான வண்டி வருவதற்குச் சற்று காலதாமதம் ஆகிக்கொண்டிருந்தது. யாத்திரிகர் பலரும் கோயில் வளாகத்தில் படுத்துத் தூங்கிவிட்டனர்.



பூசைகள் முடிவடையுவும் 
காலை மணி 6.45 அளவில் அன்னதான வண்டி வந்து சேரவும் சரியாக இருந்தது.
6.53 am
6.55 am
ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

7.05 am
நாக்பூர் 608 கி.மீ..
அடிலாபாத் 415 கி.மீ.
ஹைதராபாத் 128 கி.மீ.
என்ற தகவல்பலகையை யாத்திரிகர் பலரும் படித்துப் பார்த்து மகிழ்ந்து நடந்தனர்.
7.11 am



7.20 am


ஆடி 2 (18.07.2014) 7.38 am

7.44 am
வெல்தூர் (Veltoor) என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டோம்.  யாரோ ஒரு வழிப்போக்கர் அந்தப் பேருந்து நிலையத்தில் படுத்திருந்தார்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவருக்கும் காலைஉணவு வழங்கினார்.

8.46 am
8.47 am


8.07 am

8.43 am


9.02 am
சாலையோரம் வழிந்தோடும் குடிநீர்க் குழாயின் மேல் ஒரு பிலாஸ்டிக் பாட்டிலை வைத்து,  அந்தப் பாட்டில் விழுந்துவிடாமல் இருக்க அதன்மேல் ஒரு சிறு கல்லையும் தூக்கிவைத்துத் தண்ணீர் பிடித்துக்கொள்ள வசதி செய்திருந்தனர்.


9.36 am
காலை மணி 9.40 அளவில் அடகல் (Addakal) என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம்.  சாலையோரம் உள்ள பள்ளியில் தங்கினோம்.  அன்பர் ஒருவர் வந்து யாத்திரிகர்களை வரவேற்றார்.
ஓய்வு.

10.25 am

https://goo.gl/maps/PW4ekSPZiXE1iuVe8
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக