பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் .....
இன்று 36 ஆவது நாள், ஆனி 29 ( 13.07.2017) வியாழக் கிழமை.
நடுப்பட்டி வழிவிடுமுருகன் மண்டபத்தில் இருந்து அதிகாலை மணி 2.20க்கு வழக்கம்போல் வழிபாடு செய்து ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.
வழியில் சேது பேங்கர்ஸ் அன்பர் வீட்டில் ரொட்டியும் தேநீரும் கொடுத்து உபசரித்தனர்.
வழியில் சாலையோரம் உள்ள ஒரு “தாபா” உணவுவிடுதில் அமர்ந்து, காலை மணி 7.15 அளவில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.
காலை மணி 8.45 அளவில் மணப்பாறை அருள்மிகு வைத்தீசுவரன் தையல்நாயகி திருமண மண்டபம் வந்துசேர்ந்தோம்.
நகரத்தார் பெருமக்கள் வரவேற்று மரியாதைகள் செய்து உபசரித்தனர்.
காலை மணி 9.00 அளவில் ஓர் அன்பர் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று யாத்திரிகர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கிச் சிறப்புச் செய்தார்.
மதிய உணவு.
ஓய்வு.
அன்பர்கள் பலரும் குடும்பத்தினருடன் வந்திருந்து குருசாமி அவர்களிடம் ஆசிபெற்றுச் சென்றனர்.
மாலை நேரத்தில் ஓர் அன்பர் பழம் பால்கோவா வழங்கிச் சிறப்புச் செய்தார்.
இரவு வழிபாடு
உணவு
ஓய்வு.
https://goo.gl/maps/KPhURqNcjCiiWAWC6
இன்றைய பயணம் சுமார் 22 கி.மீ.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக