ஞாயிறு, 26 ஜூலை, 2020

27.07.2014 காசி பாதயாத்திரை - 63ஆம் நாள் - ஆடி 11

காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம். இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரை யைத் தொடங்கி, பயணத்திட்டத்தில் ஒரு சிறு மாறுதலாக,  ஒருநாள் முன்னதாகவே, நேற்று துப்ரான் என்ற ஊருக்கு வந்து தங்கி இருந்தோம்.

இன்று 63ஆம் நாள் - ஆடி 11 (27.07.2014) ஞாயிற்றுக் கிழமை. 
தின வழிபாட்டை முடித்துக் கொண்டு ரொட்டியும் ஹார்லிக்சும் சாப்பிட்டுவிட்டு அதிகாலை மணி 3.20 க்கு யாத்திரையை தொடர்ந்தோம்.


6.11 am

6.23 am
வழியில் வழக்கம்போல காலை6.30க்கு தேநீர்.

மழை தூரிக் கொண்டே இருந்தது.

7.37 am

7.38 am

7.39 am

7.41 am

8.01 am
துப்ரான் ஊரில் இருந்து வாடியராம் என்ற ஊர் வழியாகச் செல்ல வேண்டும்.  ஆனால் முன்னே சென்ற யாத்திரிகர் நெடுஞ்சாலையின் புறவழிச் சாலைவழியாகச் சென்று விட்ட காரணத்தினால், எல்லா யாத்திரிகர்களும் புறவழிச்சாலை வழியாகவே நடந்து சென்றோம்.
இதனால் நடைப்பயணத் தொலைவும் நேரமும் கூடுதலானது.

8.25 am

செங்குந்தா என்ற ஊரை அடைந்து விட்டோம். 
சாலையோரம் இருந்த R & B Guest House, Telangana 502255 கட்டிட வளாகத்தில் அமர்ந்து காலை உணவு.  


10.04 am

10.07 am

10..12 am

10.20 am

10.22 am


காலை மணி 10.15 அளவில் நரசிங்கி என்ற ஊரைச் சென்று சேர்ந்தோம்.

10.24 am


10.37 am

10.37 am

10.45 am
குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அன்பர் ஒருவர் இந்த ஊரில் உள்ள திருமண மண்டபத்தில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.  மண்டபத்தின் மாடியில் யாத்திரிகர்கள் தங்கினோம்.

தங்கல்.
மதிய உணவு.
ஓய்வு.


மாலைநேரம் மழை பெய்தது.
மாலைநேரம் வழிபாடு.  ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

வழிபாட்டிற்குப் பின்னால், குருசாமியின் முகம் சற்று வாட்டமாகக் காணப்பட்டது.   சற்று கோபமாகவும் இருந்தார். 
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இப்படிக் கோபமாக இருந்ததை அன்றுதான் நான் முதன்முறையாகப் பார்த்தேன்.

குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவருக்கு முன்னால் இருந்த ஒரு காங்கிரிட் தூணைப் பார்த்த படி, யாத்திரிகர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுப் சொல்லாமல்,  யாத்திரிகர் யாருடைய முகத்தையும் பார்க்காமல்,  “இந்த யாத்திரையானது மிகவும் புனிதமானது,  இதை நான் நடத்தவில்லை, இதைப் பிள்ளையார் நடத்துகிறார்,  யாத்திரையில் நடக்கும் ஒவ்வொவரையும் பிள்ளையார் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்,  யாத்திரிகர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும், என்னால் இயன்ற அளவிற்கு நல்லபடியாகச் செய்து கொடுத்து வருகிறேன்,  அன்னதான வண்டியில் ஒட்டப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டில் உள்ள பிள்ளையார் நடப்பதை யெல்லாம் பார்த்துக் கொண்டே வருகிறார்” என்று சொன்னார்.   அவ்வளவுதான்,  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் எந்தத் தூணைப் பார்த்தபடி இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாரோ,  அந்தத் தூணில் கட்டப்பட்டிருந்த மின்சார பல்ப்  அப்படியே தீப்பிடித்து எரியத் தொடங்கியது.  குருசாமியின் கோபச் சொற்கள் குண்டுபல்லை எரித்து விட்டன.

இது போன்ற  நிகழ்ச்சிகளை நான் தமிழ்ச் சினிமாக்களில்தான் பார்த்துள்ளேன்.  இப்போது முதன்முறையாக நேரில் பார்த்து வியந்து பயந்து போனேன்.  சற்றே சுதாரித்துக் கொண்டு,  தீப்பிடித்து எரியும் பல்ப் சுவிட்சை அனைத்தோம்.    காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் எரிந்துபோன அந்த பல்ப், ஹோல்டர், வயர் எல்லாவற்றையும் வெட்டி எடுத்து விட்டுப் புதிதாக மின்சார பல்ப் ஒன்றைப் போட்டார்.  யாத்திரிகர் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு வியந்து பயந்து, புதிய மின்விளக்கு ஒளியில் மிகவும் அமைதியாக அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்து இருந்தனர்.
“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 
கணமேயும் காத்தல் அரிது” (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:29).  என்ற திருக்குறளுக்குப் பொருள் சேர்ப்பதாய் நிகழ்ந்தது இது.


இரவு உணவு.
ஓய்வு.



https://goo.gl/maps/SjrZREWCw3kjLwky9
இன்றைய பயணம் சுமார் 30 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக