காசி பாதயாத்திரை - பயண அனுபவம் -
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 49ஆம் நாள் - ஆனி 29 (13.07.2014) ஞாயிற்றுக் கிழமை.
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று ஆந்திராவில் உடுமலப்பாடு என்ற ஊரிலுள்ள தத்தாத்ரேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.
இன்று அதிகாலை மணி 3.10 அளவில் காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு பாதயாத்திரை புறப்பட்டோம்.
6.20 am
7.02 am
லாடகிரி (Laddagiri) வேல்துருத்தி ( Veldurthi) என்ற பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் போன்று ஒலித்தன.
7.10 க்கு வேல்துருத்தி என்ற ஊர் அருகே காலைதேநீர் .
7.10 am
7.18 am
வழியில் வேல்துருத்தி ஸ்ரீ சாய் ஐயப்பா வெங்கடேசுவரர் திருக்கோயில் ( https://goo.gl/maps/XKEa4MbXDfXUHxFMA) கோபுரம் கட்டிமுடிக்கப் பெற்று குடமுழுக்கு நடைபெறத் தயாரான நிலையில் இருந்தது. கோபுரத்தைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.
8.10க்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஜீவசமாதி யில் காலை உணவு .
அன்னதான வண்டியைப் பார்த்ததும் ஒரு லாரி நின்றது. அதிலிருந்து ஒரு இளைஞர் இறங்கி வந்து யாத்திரிகர்களை நலம் விசாரித்தார். இராமேசுவரத்தில் இருந்து காசிக்குப் பாதயாத்திரை செல்லும் செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்து போனார். அவரது பெயர் நினைவில் இல்லை.
படத்தில் லாரிஓட்டுநர், காசிஸ்ரீ சின்னக்கருப்பன், காசிஸ்ரீ மோகன் என்ற பெரியகருப்பன்.
நான்குவழிச்சாலை விரிவாக்கத்திற்காகச் சாலையை அகலப்படுத்தும்போது சாலையோரம் இருந்த கோயில்களை அப்படியே பெயர்த்தெடுத்து அருகில் கட்டிக் கொடுக்காமல் கைவிட்டுள்ளனர். இடிக்கப்பட்ட கோயில்களைக் கண்டு மனம் இடிந்து போனது.
நெடுஞ்சாலை யிலிருந்து உளிண்டகொண்டா ஊருக்கு பிரியும் பாதைக் காட்டும் பெயர்ப்பலகையானது நெடுஞ்சாலைத் துறையினரால் வைக்கப்பட வில்லை. பெயர்ப் பலகை ஆங்கிலத்திலும் இல்லை, இந்தியிலும் இல்லை.
இதனால் இந்தப் பெயர்ப் பலகையைச் சரியாக க் கவனியாது யாத்திரிகர் பலரும் உளிண்டகொண்டா ஊரின் புறவழிச்சாலை வழியாக நெடுஞ்சாலை யிலேயே நடந்து சென்று விட்டனர். கடைசியாக வந்த நாங்கள் சிலர் மட்டும் பாதை தெரியாமல் நின்று கொண்டிருந்தோம். குருசாமி பச்சைக்காவடி அவர்களும் வந்து சேர்ந்து, ஏன் இங்கே நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார்.
பாதை தெரியாமல் நிற்கிறோம் என்று சொன்னோம். இதோ இதுதான் ஊருக்குள் செல்லும் பாதை, நாம் உளிண்டகொண்டா ஊருக்குள் சென்று அங்குள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வேண்டும் என்று குருசாமி கூறினார். உடனே புறவழிச்சாலை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தவர்களுக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்து ஊருக்குள் வரச் சொன்னோம்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் விபரம் அறிந்து கொண்டு அவரே ஒவ்வொரு யாத்திரிகரையும் நிறுத்தி ஊருக்குள் செல்லுமாறு கூறிச் சென்றார். முயல் ஆமை கதைபோல், எங்களை முந்திச் சென்ற அனைவரும் எங்களுக்குப் பிந்தி வந்து சேர்ந்தனர்.
உளிண்டகொண்டாவில் மலைமேல் ஒரு சிறு கோயில் உள்ளது. அடிவாரத்திலும் மிகவும் பழைமையான கோயில் ஒன்று உள்ளது..
காலை மணி 10.20க்கு உளிண்டகொண்டா ஊருக்கு வந்து சேர்ந்தோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளியில் யாத்திரிகர்கள் தங்குவதற்கென இரண்டு வகுப்பறைகளை ஒதுக்கிக் கொடுத்தனர். மின்வசதி செய்து கொடுத்தனர். மழைபெய்து பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி இருந்தது.
இந்தப் பள்ளிக்கூடம் “உண்டுஉறைவிடப் பள்ளி” எனத் தோன்றியது. இன்று ஞாயிற்றுக் கிழமை, பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரும் குடும்பத்துடன் பள்ளி வளாகத்தில் வந்து தங்கி இருந்தனர். அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த மதியச் சாப்பாட்டைப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டனர். தாய்மார்கள் சிலர் அவர்களது பெண்பிள்ளைகளுக்கு தலைமுடியைச் சீவிச் சிங்காரித்து விட்டுக் கொண்டிருந்தனர். மாணவர் ஆசிரியர் பெற்றோர் அனைவரையும் மலர்ந்த முகத்துடன் காணமுடிந்தது.
இந்தப் பள்ளிக்கூடம் “உண்டுஉறைவிடப் பள்ளி” எனத் தோன்றியது. இன்று ஞாயிற்றுக் கிழமை, பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரும் குடும்பத்துடன் பள்ளி வளாகத்தில் வந்து தங்கி இருந்தனர். அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த மதியச் சாப்பாட்டைப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டனர். தாய்மார்கள் சிலர் அவர்களது பெண்பிள்ளைகளுக்கு தலைமுடியைச் சீவிச் சிங்காரித்து விட்டுக் கொண்டிருந்தனர். மாணவர் ஆசிரியர் பெற்றோர் அனைவரையும் மலர்ந்த முகத்துடன் காணமுடிந்தது.
யாத்திரிகர் உடன் வரும் அன்னதான வண்டியின் சக்கரத்தில் காற்று இல்லாமல் இருந்தது. அதைக் கழடி எடுத்துச் சென்று சீர் செய்து கொண்டு வந்து மாட்டினர்.
மதிய உணவு .
மாலை நேரத்தில் பலர் வந்து குருஜி யிடம் அருள் வாக்கு கேட்டுச் சென்றனர்.
மாலைநேரத்தில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர் அனைவருக்கும் குருஜி சுடச்சுட “பூஸ்ட்” கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மாலைநேரத்தில் இன்று யாத்திரிகர்களுக்கும் “பூஸ்ட்” வழங்கப்பட்டது.
தங்கல் .
ஓய்வு.
ஓய்வு.
https://goo.gl/maps/YSTdZPQ6oNrdxEKZA
இன்றைய பயணம் சுமார் 28 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு தத்தாத்ரேயர் திருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக