காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 56ஆம் நாள் - ஆடி 4 (20.07.2014) ஞாயிற்றுக் கிழமை. 26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று புத்பூர் என்ற ஊரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு வந்து தங்கியிருந்தோம். இன்று அதிகாலை 2.10 மணிக்கு தினசரிவழிபாட்டை முடித்துக் கொண்டு, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுபிட்டுவிட்டு ராஜபூர் நோக்கிப் பயணம் புறப்பட்டோம். குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்தது.
6.09 am
காலை மணி 6.00 க்குச் சாலையோரம் இருந்த கடை வாயிலில் அமர்ந்து ஓய்வு எடுத்தோம். சிலர் அயர்ந்து தூங்கிவிட்டனர். அன்னதான வண்டி சுமார் 6.30 மணிக்கு வந்தது. ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
8.30 க்கு ராஜ்பூர் என்ற ஊர் சென்று சேர்ந்தோம்.
24 கி.மீ. பயணம்.
ஓய்வு.
மதிய உணவு.
ராஜ்பூரில் தங்குவதாகத் திட்டம். ஆனால் 10 கி.மீ. தொலைவில் உள்ள பாலநகர் ஐயப்பன் கோயிலில் இருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு யாத்திரை பற்றிக் கேட்டறிந்தனர். பாலநகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் புதிதாக கட்டி முடிக்கப் பட்டுள்ள தாகவும், அங்கு வந்து தங்குமாறும் கேட்டுக் கொண்டனர். ஸ்ரீ ஐயப்ப பக்தர்களின் விருப்பத்திற்கு இசைய அங்கே சென்று தங்களாம் எனக் குருசாமி அவர்கள் கூறினார்.
எனவே மதிய உணவு முடிந்தவுடன் மதியம் 1.45 மணியளவில் பாலநகர் நோக்கிப் புறப்பட்டோம்.
1.54 pm
எங்கிருந்தோ மணல் அள்ளிக் கொண்டு வந்து சாலையோரம் கொட்டியிருந்தனர். இந்த வகையிலான மணல்திட்டுகள் சில மலைகளின் மேல் பொக்குப் பாறைகளாகப் படிந்திருப்பதையும், சில இடங்களில் கிரானைட் பாறைகளின் இடுங்களில் படிந்திருப்பதையும் காணலாம்.
1.54 pm
எங்கிருந்தோ மணல் அள்ளிக் கொண்டு வந்து சாலையோரம் கொட்டியிருந்தனர். இந்த வகையிலான மணல்திட்டுகள் சில மலைகளின் மேல் பொக்குப் பாறைகளாகப் படிந்திருப்பதையும், சில இடங்களில் கிரானைட் பாறைகளின் இடுங்களில் படிந்திருப்பதையும் காணலாம்.
பிரளயகாலத்தில் கடல்கோள் உண்டாகிக் கடல்கரையைக் கடந்த போது அடித்துவரப்பட்ட மணல் இது என்பது எனது கருத்து.
மதியம் 2.00 மணிக்கு மேகங்கள் சூழ்ந்தன. சாரல் அடித்தது. யாத்திரிகர் குடை பிடித்துக்கொண்டு நடந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி கனமழை பெய்யவில்லை.
2.08 pm
மாலை 3.45 க்கு பாலநகர் ஐயப்பன் கோயிலைச் சென்று சேர்ந்தோம். ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு வந்து யாத்திரிகர்களை வரவேற்று தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
தங்குவதற்கு மிகவும் வசதியாக அனைத்து வசதிகளுடன் கோயில் கட்டப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் ரொட்டியும் தேநீரும்.
மாலை நேரத்தில் ரொட்டியும் தேநீரும்.
வழிபாடு.
தங்கல்.
ஓய்வு.
ஓய்வு.
இரவு உணவு.
தங்கல்.
https://goo.gl/maps/vtMkGBBU3t1UxUxa6
இன்றைய பயணம் சுமார் 35 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பனின் திருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக