வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று டிச்பள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
இன்று 68ஆம் நாள் - ஆடி 16 (01.08.2014) வெள்ளிக் கிழமை.
அதிகாலை 2.50 மணிக்கு யாத்திரைக்குத் தயார் ஆனோம். வழக்கம்போல் காலை வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு டிச்பள்ளி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து யாத்திரை புறப்பட்டோம்.
விடியும்போது கண்ணிற்குக் காட்சியளித்த கோபுரத்தையும் நந்தியையும் கண்டு வணக்கிக் கொண்டு நடையைத் தொடர்ந்தோம்.
6.20 am
6.20 am
இத்தனை நாட்கள் இருந்து வந்த இதமான மேகமூட்டமான குளிர்ந்த பருவநிலை மாறி விட்டது.
வழியில் சாலையோரம் ஒரு ஐயப்பன் கோயிலைக் கண்டோம். 18 படி ஏறிச் சென்று ஸ்ரீ ஐயப்பனைக் கும்பிடுவது போன்று கோயிலை அமைத்துள்ளனர். அனைவரும் விருப்பிப் படம் எடுத்துக் கொண்டனர்.
அன்னதான வண்டி வந்து விட்டது.
சாலையோரம் உள்ள பெட்ரோல்பங்கில் அமர்ந்து,
காலை 8.15 மணிக்குக் காலைஉணவு.
11.23 am
நான்குவழிச் சாலை அமைக்கப்பட்ட காரணத்தினால், அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் அதிகதூரம் சுற்றி வரவேண்டியுள்ளது. இவ்வாறு அருகில் உள்ள இடத்திற்கு அதிகதூரம் சுற்றிவருவதைத் தவிர்த்து
ஒருவழிச்சாலையில் எதிர்புறம் தவறாக வாகனம் ஓட்டி வருகின்றனர். https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2018/03/blog-post_9.html
பொக்குப்பாறை உருண்டைகள் மலையளவு குவிந்து கிடக்கின்றன. அந்த மலை மீது இந்தக் கோயில் உள்ளது. சிறு சிறு பாறைகளுக்கு இடையே ஆட்கள் நுழைந்து சென்று வேறு வழியாக வெளியே வந்து வேடிக்கை காட்டுகின்றனர்.
12.06 pm12.07 pm
குரங்குகள் தொல்லை அதிகம், உணவுப் பொருட்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உள்ளூர்வாசி ஒருவர் வந்து எச்சரித்தார். அவர் சொன்னது போன்றே, ஒரு குரங்கு வந்து பொட்டுக்கடலை டப்பாவை தூக்கிச் சென்றுவிட்டது.
மற்றபிற யாத்திரிகர் அனைவரும் நடந்து வந்த அசதியில் படுத்துவிட்டனர். சமையல் முடியும் வரை காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்கள் மட்டும் படுத்து ஓய்வு எடுக்காமல், குரங்குகள் வந்து சமையல் சாமான்களைத் தூக்கிச் செல்லாவாறு பார்த்துக் கொண்டார். ஒரு குரங்கு மட்டும் ஓடாமல் எதிர்த்து நின்றது. ஜெய் ஸ்ரீ ராம்.
12.12 pm
கடந்து வருடம் குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்ற மாணவன் ஒருவன் விரைந்தோடி வந்து குருசாமி அவர்களை வணங்கி ஆசி பெற்றான்.
அவனைத் தொடர்ந்து அவனது நண்பர்கள் பலரும் வந்து குருசாமி அவர்களிடம் அவர்களது எதிர்காலக் கல்வி பற்றிக் கேட்டறிந்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்த மாணவர்களை ஆசிர்வதித்தார்.
அவனைத் தொடர்ந்து அவனது நண்பர்கள் பலரும் வந்து குருசாமி அவர்களிடம் அவர்களது எதிர்காலக் கல்வி பற்றிக் கேட்டறிந்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்த மாணவர்களை ஆசிர்வதித்தார்.
12.18 am
அந்த ஊரில் வசித்து வரும் இந்த அன்பர் வந்து யாத்திரிகர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார். குருசாமியிடம் மிகவும் பயபக்தியாக நடந்து கொண்டார்.
12.15 க்கு தக்காளி சூப் வழங்கப்பட்டது.
1.30 மதிய உணவு.
ஓய்வு.
மதியம் 1.30 மணிக்கு நல்ல மழை.
மாலை நேரத்தில் பலரும் குடும்பத்தினருடன் வந்து குருசாமி அவர்களிடம் அருள்வாக்கு கேட்டுச் சென்றனர்.
தங்கல்.
https://goo.gl/maps/nnViA3jTRdSe15kd6
பயண தூரம் 34 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக