திங்கள், 6 ஜூலை, 2020

07.07.2017அறுபடைவீடு பாதயாத்திரை - 30ஆவது நாள், ஆனி 23

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  30ஆவது நாள், ஆனி 23 (07.07.2017) வெள்ளிக் கிழமை.
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு 08.06.2017 அன்று பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று திண்டுக்கல் வந்து தங்கியிருந்தோம்.

இன்று காலை 2.20 மணிக்குத் திண்டுக்கல் நகரத்தார் மண்டபத்தில் இருந்து யாத்திரை புறப்பட்டோம்.  
காலை மணி 6.15 அளவில் ரெட்டியார் சத்திரம், கொத்தப்புள்ளி அருள்மிக கதிர்நரசிங்கப்பெருமாள் திருகோயிலை வணங்கிக் கொண்டு நடந்தோம்.  
செம்மடைப்பட்டி கிராமத்திற்குச் சற்று முன்னால் ரொட்டி தேநீர் சாப்பிட்டோம்.


காலை மணி 8.30 க்கு செம்மடைப்பட்டி ஸ்ரீ தேனாண்டாள் பழனி பாதயாத்திரை அன்னதான மண்டபம் வந்து சேர்ந்தோம்.  மண்டப உரிமையாளர் திருமதி ருக்மணி அம்மாள் அவர்கள் குருசாமிஅவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றார்.



குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குப் பாதபூசை செய்து மாலை மரியாதை செய்து வரவேற்றார். 

மண்டபத்தில் இருந்த சுவாமி படங்களுக்கு மாலைகள் சாத்தி, தூப தீபங்கள் காட்டிக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வழிபாடு செய்தார்.  வழிபாடு முடிந்தவுடன் அனைவரையும் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குப் பச்சை நிறத்தில் வேட்டி துண்டும், பிற யாத்திரிகர்களுக்குக் காவி நிறத்தில் வேட்டி துண்டும் கொடுத்து ஆசி பெற்றார்கள்.

மண்டபத்திலிருந்து காலை உணவு வழங்கினர்.
ஓய்வு.

மதிய சாப்பாடு முடிந்தவுடன் மதியம் மணி 2.30 அளவில், தேனாண்டாள் மண்டபத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.


மாலை மணி 5.30 க்கு ஒட்டஞ்சத்திரம் குழந்தை வேலப்பர் ஆலயத்திற்கு எதிரே உள்ள பழனி பாதயாத்திரை அடியார்கள் தங்கும் விடுதியில் தங்கினோம்.  மாலை மணி 7.00க்கு அருள்மிகு குழந்தைவேலன் கோயிலுக்குச் சென்று வழிபாடு.  அர்ச்சகர் சிறப்பு வழிபாடு செய்து வைத்தார்.  யாத்திரிகர்களுக்குத் தண்ணீர் வசதி செய்து கொடுத்தார்.
மாலை நேரப் பிரார்த்தனை.
இரவு உணவு.
ஓய்வு.

https://goo.gl/maps/D2HAJ9dgyJmjEcxg7
இன்றைய பயணம் சுமார் 34 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக