வியாழன், 23 ஜூலை, 2020

24.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 47 ஆவது நாள், ஆடி 8

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  சுவாமிமலையில் இருந்து வைத்தீசுவரன்கோயில் பாண்டிச்சேரி சிதம்பரம் காஞ்சிபுரம் வழியாகத் திருத்தணிகை செல்வதாகப் பயணத்திட்டம்.

இன்று  47 ஆவது நாள், ஆடி 8 ( 24.07.2017) திங்கள் கிழமை.
வைத்தீசுவரன் கோயிலில் பிஎல்.ஏ. திருமண மண்டபத்தில் தங்கியிருந்தோம்.  காலை 6 மணிக்கு வழிபாடு, ரொட்டி தேநீர்.

குருசாமி அவர்களின் அனுமதி பெற்று யாத்திரிகர் பலரும் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனர்.  கோயில் தேவாரப் பதிகங்களில் புள்ளிருக்கு வேளூர் என்ற குறிக்கப்படுகிறது. 



புள் - பறவை (சடாயு) வழிபட்ட திருத்தலம்
இருக்கு - ரிக்வேதம் வழிபட்ட திருத்தலம்
வேள் - முருகன் வழிபட்ட திருத்தலம்
ஊர் - சூரியன் வழிபட்ட திருத்தலம்.

முருகப் பெருமான் முத்துக்குமரன் என்ற திருநாமத்தோடு இங்கு இருள் பாலிக்கிறார்
குமரகுருபரர் இவர் மீது முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடி இருக்கிறார்.
சூரனை வதை செய்ய அம்பாளிடமிருந்து சக்திவேல் பெற்ற தலம்.





காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் திருப்புகழ் மற்றும் தேவாரப் பாடல்களைப் பாடினார்.



அப்பர் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம்

8.30 மணிக்கு காலை உணவு.
ஓய்வு.
மாலை 5 மணிக்கு வழிபாடு
ஓய்வு.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக