திங்கள், 20 ஜூலை, 2020

21.07.2014 காசி பாதயாத்திரை - 57ஆம் நாள், ஆடி 5


காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  பயணத்திட்டத்தில் ஒரு சிறு மாற்றமாக,  சுமார் 10 கி.மீ. கூடுதலாக நடந்து, நேற்று பாலநகர் ஐயப்பன் கோயில் வந்து தங்கியிருந்தோம்.  

இன்று 57ஆம் நாள் - ஆடி 5 (21.07.2014) திங்கள் கிழமை.
அதிகாலை 2.30 மணிக்கு தினசரிவழிபாட்டை முடித்துக் கொண்டு, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுபிட்டுவிட்டு மதியம் மணி 11.30 அளவில் “பாலமாகுள Palamakul” என்ற ஊருக்குப் பயணம் புறப்பட்டோம்.

5.57 am

5.58 am
"All the roads lead to Rome" என்பார்கள்.   உண்மையில் பாரததேசத்தில்  உள்ள ஒவ்வொரு ஊரும் ஒரு ரோம் நகரம் போன்றதாகும்.  இந்தியாவல் எந்தவொரு சாலையில் நடந்து சென்றாலும் அந்தப் பாதையானது அந்தஊரின் கோயிலின் வாயிலுக்கே சென்று சேரும்.  காசி பாயாத்திரையின் போது நாங்கள் பார்த்த இந்தக் கோயிலின் கோபுரத்திற்கும் தேர்நிறுத்தத்திற்கும் இடையே சாலை அமைந்துள்ளது.  





6.00 am
கோயில் வாயிலை அடையும் போது மிகவும் சரியாகக் காலை 6.00 மணி ஆகியிருந்தது.  கோயில் திறந்திருந்தது.  கோபுரத்தை வணங்கிக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

6.15 am
காலை மணி 6.15 அளவில் மிலினியம் டவுன்சிப் (Millenium township, Shadnagar, 509216) அருகே சாலையோரம் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம். யாத்திரிகர் சிலர் அயர்ந்து தூங்கிவிட்டனர். அன்னதான வண்டி சுமார் 6.45 அளவில் வந்து சேர்ந்தது.  ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

6.38 am

7.32 am

7.33 am


7.48 am

8.03 am

8.24 M

9.24 AM
H.B.L. நகர் அருகே, காலை மணி 8.45 அளவில் சாலையின் மறுபக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டோம்.  சாப்பிட்டு முடித்தவுடன் குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும் கடைசியாக நடந்து வந்தனர்.  படத்தில் பெட்ரோல் பங்கில் இருந்து அன்னதான வண்டி வெளியே வருதைக் காணலாம்.

9.37 am

9.48 am

10.18 am

10.51 am
காலை மணி 10.50 அளவில் திம்மபூர் வந்து சேர்ந்தோம்.

10.54 am

11.25 am

மதியம் மணி 11.30 அளவில் “பாலமாகுள Palamakula” என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கினோம்.


https://goo.gl/maps/GyZfBBa3G6hizyP46
இன்றைய பயணம் சுமார் 34 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக