புதன், 22 ஜூலை, 2020

23.07.2014 - காசி பாதயாத்திரை - 59ஆம் நாள் - ஆடி 7

காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று காகன்பேடு அம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம். 
 
இன்று 59ஆம் நாள் - ஆடி 7 (23.07.2014) புதன் கிழமை.
அதிகாலை 4.10 மணிக்கு தினசரிவழிபாட்டை முடித்துக் கொண்டு, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுபிட்டுவிட்டு காகன்பேடு ஸ்ரீ எல்லம்மா கோயில் இருந்து பயணம் புறப்பட்டோம்.



அன்பர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்துநின்று யாத்திரிகர்களை வரவேற்றனர்.  

காசிஸ்ரீ சிவப்பாவின் நண்பர் திரு ராமு அவர்களும் அதிகாலையில் பேருந்தில் வந்து சேர்ந்து யாத்திரிகர்களை வரவேற்றார்.



குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருந்தது.








சாலையோரம் அன்புர் ஒருவர் நின்று யாத்திரிகர்களை வரவேற்ற வழிகாட்டி அழைத்துச் சென்றார்.


















தலைநகர் ஹைதராபாத் ஊர் வழியாக செகந்திராபாத்  ஊரில் உள்ள குஜராத் சேவாமந்திர்  8.50 க்கு வந்து சேர்ந்தோம்.  பள்ளி வளாகத்தில் இருந்த மண்டபத்தை யாத்திரிகர்கள் தங்குவதற்குக் கொடுத்தார்கள்.

காலை உணவு .
ஓய்வு .

இன்றைய பயணம் முழுதும் ஹைதராபாத் நகரத்தின் உள்ளேயே இருந்தது .
குருஜி பச்சைக்காவடியின் அன்பர் ஒருவர் மதியம் அன்னதானம் வழங்கினார் .
ஓய்வு .
தங்கல்.

https://goo.gl/maps/gRGozvS18pLA1S4NA
இன்றைய பயணம் சுமார் 20 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக