வியாழன், 16 ஜூலை, 2020

17.07.2017 அறுபடைவீடு - பாதயாத்திரை - 40 ஆவது நாள், ஆடி 1

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் .....

இன்று  40 ஆவது நாள், ஆடி 1 ( 17.07.2017) திங்கள் கிழமை.
திருச்சி வெக்காளியம்மன் கோயிலில் வாயிலில் இருந்து தோகூர் சிவன் கோயிலுக்குப் பயணம்.


அதிகாலை மணி 3.30க்கு வழக்கான காலைவழிபாடு.  ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம்.  கல்லணை நோக்கி எங்களது பயணம்அமைந்தது. 

சாலையோரம் செம்பூத்து பறவையைக் கண்டு குருசாமி பச்சைக்காவடிஅவர்கள் கும்பிட்டுக் கொண்டார்.



 கல்லணைக்கு அருகே தோகூர் என்ற ஊரில்,   ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கரைமேலழகர் ஐயனாரை வணங்கிக் கொண்டோம்.    ஐயனார் கோயிலை அடுத்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்குக் காலை மணி 7.30க்குச் சென்று சேர்ந்து அங்கே தங்கினோம்.

காலைச் சிற்றுண்டி உள்ளூர் அன்பரின் உபயம்.
ஓய்வு.



ஈரோடு அன்பர் காசிஸ்ரீ சந்திரமோகன் அவர்கள் வந்து குருசாமி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றார்.
சாப்பாட்டு அரிசியும் இட்லிஅரிசியும் கொண்டு வந்து அன்னதானத்திற்குக் கொடுத்தார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவாக, தோகூர் எஸ்டேட் மு. சுப்பிரமணியன் செட்டியார் சு.தைலம்மை அம்மாள் நினைவாகச் சேத்திரத் திருவெண்பா பாடல்கள் பாடப்பெற்று கல்வெட்டில் எழுதப்பெற்றிருந்தன.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவாக, தோகூர் எஸ்டேட் மு. சுப்பிரமணியன் செட்டியார் சு.தைலம்மை அம்மாள் நினைவாகச் சேத்திரத் திருவெண்பா பாடல்கள் பாடப்பெற்று கல்வெட்டில் எழுதப்பெற்றிருந்தன.

மாலை மணி 5.00க்கு முறுக்கு, தேநீர் வழங்கப்பட்டது.
மாலைநேரப் பிரார்த்தனை.  அனைவரும் கோயிலில் வழிபாடு செய்துகொண்டோம்.
ஓய்வு.



https://goo.gl/maps/NM5VvFaqiF7z6WVu7
இன்றைய பயணம் சுமார் 18 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக