வியாழன், 30 ஜூலை, 2020

31.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 54 ஆவது நாள், ஆடி 15

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  
சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு 
நேற்று தைலாபுரம் வந்து தங்கி இருந்தோம்.

இன்று 54 ஆவது நாள், ஆடி 15 ( 31.07.2017) வியாழக் கிழமை.
இன்று அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து   வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
யாத்திரை தொடங்கியது.
சிறு தூரல் விழுந்து கொண்டிருந்தது.
குடை பிடித்துக் கொண்டு நடந்தோம்.
பெரியதாக மழை வரவில்லை.




திண்டிவனம் எல்லையில் வடை தேநீர் சாப்பிட்டுக் கொண்டு நடந்தோம்.






காலை 8.10 மணிக்கு திண்டிவனம் மணக்குளவிநாயகர் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தோம்.



திண்டிவனம் சிவனடியார் கூட்டத்தினர் ஒருவர் வந்து வரவேற்றார்.

9.10க்கு காலைச் சிற்றுண்டி.
ஓய்வு.
மதியம் 2.00 மணிக்கு உணவு
மாலை 4.20 மணிக்கு வழிபாடு
அல்வா ரொட்டி தேநீர்.

மாலை 4:30க்கு அருள்மிகு மரகதாம்பிகை உடனாய திந்திரிணீசுவரர் ஆலய வழிபாடு. 





திந்திரி என்றால் புளி.
“ திந்திரிணீசுவரர் என்றால்  புளியமரங்களால் ஆன காட்டில் உள்ள ஈசுவரன் (புளியமரம் படிமம் ஆகிச் சிவலிங்கமாகி உள்ளது) எனப் பொருள் கொள்ளலாம்” என்பது எனது கருத்து.  திந்திரிணீசுவரர் தலபுராணம் கிடைத்தால் இந்தக் கருத்தை உறுதி செய்யலாம்.










சிவவழிபாட்டை முடித்துக் கொண்டு அருகில் உள்ள லெட்சுமி நரசிம்மர்கோயிலுக்குச் சென்றோம்.   அருள்மிகு கனகவல்லித்தாயார் லெட்சுமிநரசிம்மர் வழிபாடு.








இரவு 7.00 மணிக்கு வழிபாடு
ஓய்வு


https://goo.gl/maps/eC9S2KpF8HK5haBw8

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக