காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 53ஆம் நாள் - ஆடி 1 (17.07.2014) வியாழக் கிழமை.
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று முன்தினம் கிருஷ்ணா நதிக்கரையோரம் உள்ள பீச்பள்ளி என்ற ஊரில் உள்ள ஶ்ரீராமர் கோயில் வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
இன்று அதிகாலை மணி 2.30 அளவில் எழுந்து வழக்கமான காலை வழிபாடு செய்துவிட்டு, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுக் கொண்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தோம். அதிகாலை மணி 3.10 க்கு கிருஷ்ணாநதியைக் கடந்து சென்றோம். அந்நேரத்தில் ஒரு ரம்மியமான இயற்கைச் சூழல் நிழவியது.
3.12 am
தோமளபள்ளி (Thomala Palle) என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்திற்குக் காலை மணி 6.00 அளவில் யாத்திரிகர் சிலர் வந்துசேர்ந்து விட்டனர். அப்படியே அயர்ந்து தூங்கியும் விட்டனர். அன்னதான வண்டி காலை மணி 6.30 அளவில் வந்து சேர்ந்தது. ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
7.32 am
நதிவழி (Natevally) என்ற ஊரின் அருகே செல்லும்போது, அருகில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் தங்கியிருங்கள் என்று குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அலைபேசி வழியாகத் தகவல் சொன்னார். எனவே யாத்திரிகர் அனைவரும் சாலையோரம் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். சிறிது நேரத்தில் குருசாமி அவர்களும் வந்து சேர்ந்துவிட்டார். அதன்பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து நடந்து சென்றோம்.
காலை மணி 8.00 அளவில், தேசிய நெடுஞ்சாலையில் மிரசபள்ளி (Mirasapalli) என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டோம்.
வில்லியம்கொண்டாவில் உள்ளது ஒரு “உண்டு உறைவிடப் பள்ளி”. மாணவர்கள் இங்கேயே தங்கிப் படிக்கின்றனர். அதிகாலை நேரத்திலேயே வகுப்புகள் தொடங்கிவிடுகின்றன.
மாலைநேரம் விளையாட்டு வகுப்புகள்... மாணவ மாணவியர் இயல்பாகக் கூடி விளையாடுகின்றனர். இரவு நேரங்களில் நுண்கலை வகுப்புகளும் நடைபெறுகின்றன. வீட்டில் பெற்றோருடன் இருப்பது போன்று, இயல்பாக மாணவ மாணவியர் ஆசிரியர்களுடன் இருந்து கற்றுக் கொள்கிறனர். இந்தப் பள்ளிக்கூடம் ஒரு முன்மாதிரியான குருகுலப்பள்ளி போன்று செயல்படுகிறது.
இந்தப் பள்ளியில் ஓர் தமிழாசிரியரும் உள்ளார். தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது. https://goo.gl/maps/hZZ2248S1bzxwTrE7
யாத்திரிகர் தங்குவதற்காகப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகளை ஒதுக்கிக் கொடுத்தனர். மாலை ஓய்வு நேரத்தில் ஆசிரியர் சிலரும், மாணவ மாணவியர் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசிபெற்றனர்.
மதிய உணவு.
ஓய்வு.
தங்கல்.
https://goo.gl/maps/umX7F67gScRc3PKW8
இன்றைய பயணம் சுமார் 21 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக