செவ்வாய், 28 ஜூலை, 2020

29.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 52 ஆவது நாள், ஆடி 13

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு நேற்று பாண்டிச்சேரி  ஸ்ரீ ஐயப்பன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.  அருள்மிகு மணக்குள விநாயகரையும், ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனையும் வணங்கிக் கொண்டு மண்டபத்தில் தங்கி இருந்தோம்.

இன்று 52 ஆவது நாள், ஆடி 13 ( 29.07.2017) செவ்வாய்க் கிழமை.
இன்று பாண்டிச்சேரியில் தங்கல்.
அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து   வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.  லாஸ்பேட்டை சிவநேயச் செல்வர் கபிலன் அவர்கள் அவரது  இல்லத்திற்கு அழைத்தார்.  காலை 9.00 மணிக்கு குருசாமி பச்சைக்காவடி அவர்களும் யாத்திரிகர்களும் சிவத்திரு கபிலன் அவர்கள் இல்லம் சென்றோம்.  


அங்கிருந்த சூழல் தேவார ஆசிரியர்கள் காலத்தை நினைவூட்டுவதாக இருந்தது.

குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குப் பாதபூசை செய்து மாலை அணிவித்து பூரணக் கும்ப மரியாதை செய்து இல்லத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர்.  யாத்திரிகர் பாதங்களை நீராட்டி வரவேற்றனர்.   குருசாமி அவர்களிடம்  அங்கே இருந்த அடியார் அனைவரும் ஆசியும் விபூதி பிரசாதமும் பெற்றுக் கொண்டனர்.  குருசாமி  பச்சைக்காவடி அவர்களின் 40 வருடகால பாதயாத்திரை அனுபவங்களை ஆவலுடன் கேட்டறிந்து கொண்டனர்.  ஆனைமுகப் பெருமானும் அன்னை மீனாட்சியும் அவருடைய வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களைக் குருசாமி அவர்கள் மிகவும் நெகிழ்ச்சியாக விவரித்தார்.  

அனைவருக்கும் திருவமுது பரிமாறப்பட்டது.
யாத்திரிகர்களை சலம், பூ, தூபம், தீபம் கொண்டுவழிபட்டு வணங்கினர்.  பின்னர் குருசாமி அவர்கள் வழிபாடு செய்ய, “அரகர” கோஷத்துடன் அனைவரும் திருவமுது அருந்தினர்.  யாத்திரையின் போது உண்பதற்காகத்  திண்பண்டப் பொட்டலங்கள் வழங்கினர்.  யாத்திரிகர்களுக்கு உருத்ராட்ச மாலையும் நூலாடையும் அணிவித்து கௌரவித்தனர்.  அடியார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர்.  குருசாமி அவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்து விபூதிப் பிரசாதம் வழங்கினார்.










நாங்கள் நால்வர் மட்டும் ஓலைச்சுவடிச் சித்தர் அண்ணாமலை சுகுமாரன் அவர்களை அவரது இல்லத்திற்குச் சென்று பார்த்து வந்தோம்.

பிறகு மற்றபிற யாத்திரிகர்களுடன் தங்கியிருந்த மண்டபம் வந்து சேர்ந்தோம்.

மதிய உணவு.
யாத்திரிகர்கள் தங்கியிருந்த மண்டபத்திற்கும் அன்பர்கள் பலரும் வந்துகொண்டே இருந்தனர்...... குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கிக் கொண்டே இருந்தார்.

ஓய்வு.
மாலை நேரத்தில் அன்பர் பொறியாளர் சத்தியமூர்த்தி அவர்கள் அவரது இல்லத்திற்கு யாத்திரிகர்களை அழைத்துச் சென்றார்.  அவரது இல்லத்தில் மாலைநேர வழிபாடு.  வழிபாடு முடிந்தவுடன் சிறப்பான முறையில் இரவு உணவு அளித்துச் சிறப்புச் செய்தனர்.

மண்டபம் திருப்பினோம்.
இன்று இரவு நீண்ட நேரம் பலத்த மழை.
நேற்று இரவும் பாண்டிச் சேரியில் பரவலாக நல்ல மழை.


குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக