ஞாயிறு, 19 ஜூலை, 2020

20.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 43 ஆவது நாள், ஆடி 4

அறுபடைவீடு பாதயாத்திரை - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.  குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் .....
இன்று  43 ஆவது நாள், ஆடி 4 ( 20.07.2017) வியாழக் கிழமை.
காலை 2.30 மணிக்கு தினசரி காலை நேர வழிபாட்டை முடித்துக்கொண்டு, ரொட்டியும் ஹார்லிக்சும் சாப்பிட்டுக்கொண்டு திருவையாற்றில் இருந்து பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.


வழியில் 6.30 மணிக்குச் சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.


கபிஸ்தலத்தில் சாலையோரம் உள்ள கோயில் வளாகத்தில் காலை மணி 7.45 அளவில் காலை உணவு.





காலை மணி 8.30 அளவில் தியாகசமுத்திரம் வழியாகச் சுவாமிமலையை காலை 9.15 மணிக்கு வந்து அடைந்தோம்.

சுவாமிமலை நகர விடுதியில் தங்கினோம்.
நகரத்தார் சிலர் வந்திருந்து யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.
ஓய்வு.

மாலை நேரத்தில் குருசாமி பச்சைக்காவடி அவர்களும் யாத்திரிகர் சிலரும் முடி இறக்கிக் கொண்டனர்.
மாலை நேரத்தில் வழிபாடு.
இரவு உணவு
ஓய்வு.
https://goo.gl/maps/rxaxy28DcKTA8aPi9
இன்றைய பயணம் சுமார் 27 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக