பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். நேற்று சுவாமிமலை வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.....
இன்று 44 ஆவது நாள், ஆடி 5 ( 21.07.2017) வெள்ளிக் கிழமை.
காலை 5,30 மணிக்கு வழிபாடு.
6.00 மணிக்கு அருள்மிகு சாமிநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று வழிபாடு. சிறப்பு தரிசன வழியில் அழைத்துச் சென்றனர்.
இறையருளாளும், குருசாமி பச்சைக்காவடி அவர்களின் திருவருளாலும், இன்று சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமியை மிக அருகில் மனநிறைவோடு தரிசித்து அபிஷேக விபூதிபெற்றுக் கொண்டோம். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன் சுவாமியை வணங்கிய பின்னர், சுப்பனிடம் பாடம் கேட்ட அப்பனையும் வணங்கிக் கொண்டு, அப்பனுக்கு அருகில் நின்று அருளும் அன்னையையும் வணங்கி மகிழ்ந்தோம்.

பிரகாரம் வலம் வந்து அமர்ந்தோம். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் லட்டுப் பிரசாதம் வாங்கி வழங்கினார்.
ஆறுபடைவீடுகளில் 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி 5) சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களில் முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.
இனி நாளை திருத்தணிகை நோக்கி எங்களது பாத்திரை தொடரும் .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக