காஞ்சி மகாப் பெரியவர் 1934 ஆம் வருடம் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை செய்துள்ளார்.
ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் புத்தகத்தில் பக்கம் 226இல் உள்ளபடி ..... ....
...ஸ்வாமிகள் அவ்வப்பொழுது அருளி உபதேச மொழிகளைக் கேட்டவர்களுமான அந்நகர் மக்கள், ‘இனித் தங்களுக்கு இத்தகைய வாய்ப்பு கிட்டுமோ?‘ என்ற மனக்கவலையுடன் ஆயிரக்கணக்கில் அன்று ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார்கள். ஸ்வாமிகள் ஒவ்வொருவருடனும் இரண்டொரு வார்த்தைகள் பேசி, அவர்கள் யாவருக்கும் மந்திராக்ஷதை தந்து அவர்களை ஆசீர்வதித்தார்கள். நகரத்திலுள்ள கோடீசுவரர்களும், அரசாங்க உத்தியோகஸ்தர்களும், பல தொழில்களில் ஈடுபட்டவர்களும், ஏழை மக்களும் ஒருங்கே சேர்ந்து அன்று ஸ்வாமிகளை வழியனுப்பிய காட்சி என்றும் மறக்முடியாததாகும். செகந்திராபாத்திலுள்ள பக்தர்களின் விருப்பப்படி ஸ்வாமிகள் அந்நகரத்தில் திவான் பகதூர் ராமகோபால் சேட்டின் பௌத்திரர் ஸ்ரீ கிஷன் சேட்டின் மாளிகையில் 23-ந் தேதி தங்கி, அவ்விடத்தில் பூஜையை முடித்துக்கொண்டு, நகர மக்களுக்குச் தரிசனம் கொடுத்துவிட்டு மறுநாள் அவ்விடமிருந்து புறப்பட்டார்கள்.
நைஜாம் ராஜய வடபகுதியில் யாத்திரை -
கோதாவரி ஸ்நானம் -
1934-ஆவது வருடம் ஏப்ரல் மாதம் 24-ந்தேதி ஸ்வாமிகள் செகந்தராபாத்திலிருந்து புறப்பட்டு மேச்சல், தூப்ரான்,நரசிங்கி, பிக்னூர், காமரெட்டிபேட், இன்டல்வாய், டே ராஜபள்ளி மார்க்கமாகக் கோதாவரிக் கரையிலுள்ள சொண்ணா என்னும் இடத்திற்கு மே மாதம் 5-ந் தேதி விஜயமானார்கள். பம்பாய் மாகாணம் திரயம்பகம் என்னும் தலத்திற்கு அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற இந்தக் கோதாவரி நதியானது நைஜாம் சமஸ்தானத்தின் வழியாகப் பாய்ந்து பின்னர் ஆந்திர தேசத்தில் பிரவேசித்து, அந்நாட்டைச் செழிப்புறச் செய்யும் ஓர் புண்ணியநதியாகும். மிகப் புனிதமான இந்த நதியில் ஸ்வாமிகள் அன்று நீராடி, வேதமோதிய அந்தணர்களுக்குத் தானங்களை வழங்கினார்கள். மறுநாள் ஸ்வாமிகள் அவ்விடமிருந்து புறப்பட்டு நீர்மல், அதிலாபாத், மார்க்கமாக மத்திய மாகாணத்தைச் சார்ந்த பொண்டல்வாடா என்னும் இடத்திற்கு மே மாதம் 15-ந் தேதி விஜயமானார்கள். இவ்விடங்களிளெல்லாம் மக்கள் ஸ்வாமிகளுக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் செய்துகொடுத்துப் பிக்ஷை, பாதபூஜை முதலியவைகளை நடத்தி அதுவரை கண்டிராத ஸ்வாமிகளின் சந்திரமௌளீச்வரர் பூஜையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர். ஒவ்வொரு ஊரிலும் ஸ்வாமிகளின் வரவை தகுந்த உற்சாகத்துடன் திருவிழாப் போல், அவ்வூர் மக்கள் கொண்டாடினார்கள்...... .....
காஞ்சி மகாப் பெரியவர் இராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு செகந்தராபாத்திலிருந்து புறப்பட்டு மேச்சல், தூப்ரான்,நரசிங்கி, பிக்னூர், காமரெட்டிபேட், முதலான ஊர்கள் வழியாக யாத்திரை செய்து, கோதவரியில் புனித தீர்த்தம் ஆடியுள்ளார். அதன் பின்னர் நீர்மல், அதிலாபாத், வழியாக நாக்பூர் சென்றுள்ளார்.
காஞ்சி மகாப் பெரியவர் சென்ற அதே வழித்தடத்தில் வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் பாதயாத்திரை சென்றுள்ளனர்
காஞ்சி மகாப் பெரியவரின் திருவருளும், குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக