பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி 5) சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில் .....
இன்று 45 ஆவது நாள், ஆடி 6 ( 22.07.2017) சனிக் கிழமை.
காலை 2.20 மணிக்கு வழிபாடு முடிந்து ரொட்டியும் ஹார்லிக்சும் சாப்பிட்டுக் கொண்டு கும்பகோணம் புறவழிச்சாலை வழியாகத் திருவாலங்காடு நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
வழியில் 7.00 மணிக்கு ஆடுதுறை அருகே சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டோம். இங்கிருந்து திருஆலங்குடி சுமார் 6 கி.மீ. தொலைவு.
திருவாவடுதுறை ஆதினம் வழியாகச் செல்லும்போது, குருமகா சந்நிதானங்களை நினைந்து வணங்கிக் கொண்டு நடந்தோம்.
வழியில் 3 கி.மீ. இருக்கையில் காலை உணவு.
9.20 மணிக்கு திருவாலங்காடு கணேஷ் ராமு திருமண மண்டபத்தை அடைந்தோம்.
மதிய உணவு.
ஓய்வு.
அதன்பின்னர், யாத்திரிகர் சிலர் மட்டும் குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அனுமதி பெற்று, அருள்மிகு வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம்.
திருவாவடுதுறை ஆதின நிருவாகத்தில் அருள்மிகு வண்டார்குழலி உடனமர் வடவாரண்யேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
இங்குள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழன் சிற்பம் சிறப்புடையது.
இங்குள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழன் சிற்பம் சிறப்புடையது.
உடைவாளை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு கூப்பிய கரத்தோடுஇறைவன் திருவடிகளை தலைமுடிமேல் சுமந்தபடி நின்ற வண்ணம் உள்ளார்.
இரவு மணி 7.30க்கு வழிபாடு.
உணவு.
ஓய்வு.
உணவு.
ஓய்வு.
https://goo.gl/maps/nJ4HKcrFSjgwXfBq8
இன்றைய பயணம் சுமார் 27 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக