வெள்ளி, 17 ஜூலை, 2020

கரிகாலன் கட்டிய கல்லணை

கரிகாலன் கட்டிய கல்லணை

வடக்கே கொள்ளிடம் ஆறு ஓடுகிறது.  தெற்கே காவேரி ஆறு ஓடுகிறது.
தெற்கே ஓடும் காவேரி ஆறு தோகூர் என்ற ஊரின் அருவி (கல்லணை உள்ள இடம்) வடக்கே ஓடும் கொள்ளிடத்துடன் சேர்கிறது.
இதனால், காவேரியில் தண்ணீர் குறைவாக வரும் போது தோகூர் (கல்லணை) என்ற இடத்தில் நேராகச் செல்லாமல்  கொள்ளிடத்தில்   சேர்ந்து வீணானது.
எனவே காவேரி ஆற்றுநீரும் கொள்ளிடத்தில் சேர்ந்து வீண் ஆவதைத் தடுத்துத் தஞ்சையை வளமாக்கக் கல்லணை கட்டினான் கரிகாலன்.
கற்பாறைகளை ஆற்றின் குறுக்கே போட்டு நிறைத்து அதன்மேல் தடுப்புச் சுவர் அமைத்துள்ளனர். கரிகாலன் கட்டிய கல்லணை கற்களால் ஆனது. சுண்ணாம்பும் மூலிகைகளும் சேர்த்து அரைத்துச் சிமிண்ட் போல் பயன்படுத்தியுள்ளனர்.



கரிகாலன் கட்டிய கல்லணையின் உயரம் ஆறு அடிக்கும் குறைவு. இதனால் காவேரி ஆற்றுப் பெருக்கு எடுத்து வந்தால் (overflow) கூடுதலான தண்ணீர் கல்லணையைத் தாண்டி அதுவாகவே கொள்ளிடத்தில் சேர்ந்துவிடும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கரிகாலன் கட்டிய கல்லணை சீர் செய்யப் பெற்று மதகுகள் அமைக்கப் பட்டன. அதன் தொடர்ச்சியாக காவேரி நெடுகிலும் அணை கட்டப்பட்டு மதகுகள் அமைக்கப்பட்டன.

கூகூர் கோயில் கல்வெட்டிலும், தோகூர் கோயில் கல்வெட்டிலும் கரிகாலன் கல்லணை கட்டிய செய்தி உள்ளது.

தகவல் வழங்கியவர் :
திருக்காட்டுப்பள்ளி D. நாகராசன்.

இவரது கருத்து சரியா ?

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி.காளைராசன் 
<kalairajan26@gmail.com> to mintamil, தமிழ், Kalai, thiruppuvanam, naga
Thu, 20 Jul 2017, 19:48

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக