சனி, 18 ஜூலை, 2020

19.07.2014 காசி பாதயாத்திரை - 55ஆம் நாள் - ஆடி 3

காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.  26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  அட்டக்கல் என்ற ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்தோம்.

இன்று 55ஆம் நாள் - ஆடி 3 (19.07.2014) சனிக் கிழமை.
அதிகாலை மணி 2.40 மணிக்கு காலை வழிபாட்டை முடித்துக் கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு யாத்திரை புறப்பட்டோம்.


"சாட்சி " 19.07.2014 தெலுங்கு  இதழில் மகபூப்நகர் மாவட்டம் பிரிவில்  பக்கம் 16இல் காசி யாத்திரை பற்றிய செய்தி வெளியாகி இருந்தது.

5.07 am
அதிகாலை மணி 5.00 அளவில் சாலையோரம் இருந்த ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

5.50 am
6.19 am

6.25 am

6.28 am
6.30க்கு சாலையோரம் அமர்ந்து ரொட்டி தேநீர் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.


6.52 am

6.52 am
காலையில் பெருமழை வரப்போதுவது போன்று மேகங்கள் சூழ்ந்தன.  ஆனால் மிகவும் சிறிதளவில் சாரல் மழை தூரியது.  

6.58 am

7.06 am
ஹைதராபாத் 100கி.மீ. என்ற மைல் கல்லைப் பார்த்து யாத்திரிகர்கள் அதனருகில் நின்று படம் எடுத்துக் கொண்டனர்.

7.07 am

7.16 am

7.44 am

7.50 am

7.52 am
காலை 8.00 மணிக்கு  ஜனாம்பேட் என்ற ஊர் அருகே சாலையோரம் இருந்த பெட்ரோல் பங்கில் அமர்ந்து காலை உணவு.

8.26 am

9.10 am

9.18 am
9.20 க்கு புத்பூர்  என்ற ஊர் வந்து சேர்ந்தோம்.
புத்தருடன் இந்த ஊருக்கு தொடர்பு உள்ளது ,
எனவே  இப் பெயர் ஏற்பட்டுள்ளது என்றனர்.

9.22 am
புத்பூர் ஜில்லாபரிசத் பள்ளியில் தங்கினோம்.
பள்ளி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  எனவே மரத்தடியில் தங்கினோம்.  பள்ளி ஆசிரியர்கள் சிலர் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் “ சாட்சி” பத்திரிக்கைச் செய்தியைக் கொடுத்து  ஆசி பெற்றுச் சென்றனர். 

11.30 க்கு வெண்டைக் காய் ரசம்  யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டது.

5.05 pm
பள்ளி வளாகத்தில் அரசமரத்தடியில் புத்தர் சிலை ஒன்று இருந்தது.   புத்தர் நின்ற கோலத்தில் ஆசி வழங்கினார்.


மதிய உணவு.  
பள்ளியின் வரண்டாவில் அமர்ந்து யாத்திரிகர்கள் மதியஉணவு சாப்பிட்டோம்.  மாலைநேரம் பள்ளி விட்டவுடன் மூன்று வகுப்பறைகளை யாத்திரிகர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்து தங்குவதற்கும் வசதி செய்து கொடுத்தனர்.

ஓய்வு.


https://goo.gl/maps/V3NibtjbrsW2G5GYA
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக