காசி பாதயாத்திரை - பயணக் கட்டுரை - பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 44ஆம் நாள் - ஆனி 24 (08.07.2014) செவ்வாய்க் கிழமை.
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று ஆந்திராவில்
சோமலதொட்டியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வந்து தங்கியிருந்தோம்.
இன்று காலை 3.10 மணிக்கு காலை வழிபாடை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு மரூரில் இருந்து புறப்பட்டோம்.
காலைநேரம் அன்னதானவண்டி வருவதற்குச் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. காலை மணி 6.15 அளவில், யாத்திரிகர் பலரும் சாலையோரம் படுத்து அயர்ந்து தூங்கி விட்டனர்.
காலை மணி 7.00 அளவில் அன்னதான வண்டி வந்துவிட்டது. சாலையோரம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
7.13 am
7.35 am
7.45 am
7.13 am
7.35 am
7.45 am
வழியில் நான்குவழிச் சாலைக்காக, சாலையை அகலப்படுத்தும் போது, சிறுசிறு மலைகளை வெட்டி யெடுத்துள்ளனர். அந்த மலைகளில் பிரளயகாலத்தில் புடைபெயர்ந்த பாறைகள் நிறைந்து காணப்பட்டன.
7.53 am
நான்கு வழிச் சாலை அமைக்கும் போது, சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் எடுத்துள்ளனர். எனவே அருகே யுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டுமெனில் ஒருவழிச் சாலையில் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கும் அதிகமான தூரம் பயணம் செய்து சுற்றித் திரும்பி வரவேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் ஒருவழிச் சாலையில் எதிர்திசையில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
நான்குவழிச்சாலை விரிவாக்கத்தால் தொலைதூரம் செல்லும் வண்டிகள் வசதியாக வேகமாக நிற்காமல் செல்கின்றன. ஆனால் அருகருகே உள்ள கிராமத்தினர் அடுத்துள்ள ஊர்களுக்கும், சாலையின் மறுபக்கம் அருகேயுள்ள ஊர்களுக்கும் செல்வதற்கு ஒருவழிச் சாலையில் நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே சாலை விதிகளை மீறி ஒருவழிச்சாலையின் எதிர்ப்பக்கம் வண்டியை ஓட்டி வருகின்றனர்.
நான்குவழிச்சாலை விரிவாக்கத்தால் தொலைதூரம் செல்லும் வண்டிகள் வசதியாக வேகமாக நிற்காமல் செல்கின்றன. ஆனால் அருகருகே உள்ள கிராமத்தினர் அடுத்துள்ள ஊர்களுக்கும், சாலையின் மறுபக்கம் அருகேயுள்ள ஊர்களுக்கும் செல்வதற்கு ஒருவழிச் சாலையில் நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே சாலை விதிகளை மீறி ஒருவழிச்சாலையின் எதிர்ப்பக்கம் வண்டியை ஓட்டி வருகின்றனர்.
கலிங்கத்துப் பரணியில் தமிழகத்திற்கும் கலிங்கத்திற்கும் இடைப்பட்ட ஆறுகள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இதில் பெண்ணை ஆறும் குறிப்பிடப் பட்டுள்ளது.
“பாலா றுகுசைத் தலைபொன் முகரிப் பழவா றுபடர்ந் தெழுகொல் லியெனும்
நாலா றுமகன் றொருபெண் ணையெனும் நதியா றுகடந் துநடந் துடனே.
வயலா றுபுகுந் துமணிப் புனல்வாய் மண்ணா றுவளங் கெழுகுன் றியெனும்
பெயலா றுபரந் துநிறைந் துவரும் பேரா றுமிழிந் ததுபிற் படவே.
கோதா வரிநதி மேலா றொடுகுளிர் பம்பா நதியொடு சந்தப்பேர்
ஓதா வருநதி யொருகோ தமையுடன் ஒலிநீர் மலிதுறை பிறகாக”
(கலிங்கத்துப் பரணி - பாடல் வரி 56 - 58 - )
இன்று, காசி பாதயாத்திரையின் போது பெண்ணை ஆற்றைக் கடந்து ஆற்றின் வடகரையில் உள்ள பாமிடியை அடைந்தோம். வடபெண்ணை ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை, வரண்டு கிடந்தது.
9.31 am
9.48 am
9.51 am
10.05 am
பாமிடி என்ற ஊரில் பாண்டுரங்கன் விட்டலர் கோயிலுக்கு 10.10 க்கு வந்து சேர்ந்தோம்.
கோயிலில் இரண்டாம் நாள் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று கருடவாகனத்தில் சுவாமி புறப்பாடு.
10.31 am
பஜனை.
வழிபாடு.
ஓய்வு.
கோயிலில் மதிய உணவு.
இரவு நேரம் கோயிலில் கதாகாலட்சேபம் நடைபெற்றது.
இரவு நேரம் கோயிலில் கதாகாலட்சேபம் நடைபெற்றது.
https://goo.gl/maps/hHzFR968gRgszb5n6
இன்றைய பயணம் சுமார் 27 கி.மீ .
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக