காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,
பயணத்திட்டத்தில் ஒரு சிறு மாறுதலாக, ஒருநாள் முன்னதாகவே, நேற்றே அத்திவெளி வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
இரவு யாத்திரிகர் அனைவரும் அத்திவெளி கோயில் மண்டபத்தில் படுத்திருந்தோம்.
இன்று 62ஆம் நாள் - ஆடி 10 (26.07.2014) சனிக்கிழமை.
நள்ளிரவு நேரத்தில், அனைவரும் அயர்ந்து துங்கிக் கொண்டு இருக்கும் போது திடீரென்று கோயிலில் இருந்த மின்சார மத்தளம் ஒலிக்க ஆரம்பித்தது.
அதன் பலத்த ஓசை கேட்டு அரக்க பரக்க அனைவரும் எழுந்து பார்த்தோம்.
யாத்திரிகர் ஒருவர் வெளிச்சத்திற்காக விளக்குப்போடும் சுவிட்சிற்குப் பதிலாக மின்சார மேளத்திற்கான சுவிட்சை போட்டுவிட்டார்.
அப்போது நேரம் அதிகாலை 2.20 மணி.
இந் நிகழ்ச்சியால் அனைவரும் எழும்போதே மிகவும் கலகலப்பாக மகிழ்ந்து சிரித்தபடியே எழுந்தனர்.
தினசரி வழிபாட்டை முடித்துக் கொண்டு, ரொட்டியும் ஹார்லிக்சும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
அத்திவெல்லி கோயிலில் இருந்து மனோகராபாட் என்ற ஊர் வழியாக துப்ரான் என்ற ஊரை அடைந்தோம்.
9.17 am
இத்தனைபேர் காவிகட்டி நடத் செல்வதைக் கண்ட இருசக்கர வாகன ஓட்டி இருவர் முன்னால் சென்றுகொண்டிருந்த குருசாமியின் குறுக் சென்று பாதையை மறித்து நிறுத்தினர். குருசாமியின் உடன் சென்ற காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் யாத்திரை பற்றிய தகவல்களைச் சொன்னதும். நாங்கள் இருவரும் பத்திரிக்கையாளர்கள் எனக் கூறித் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, குருசாமி அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு,
குருசாமி பச்சைக்காவடி அவர்களைப் பேட்டி எடுத்துச் சென்றனர். காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் இராமேசுவரம் காசி பாதயாத்திரை தொடர்பான பயணத்திட்டத்தை அவர்களுக்குக் கொடுத்து, யாத்திரை தொடர்பான மேலும் சில செய்திகளைக் கூடுதலாகச் சொன்னார்.
9.20 am
துப்ரான் ஊரில் வசித்து வரும் குருஜியின் அன்பர் ஒருவர் யாத்திரிகர்களை எதிர்கொண்டு அழைத்து அவரது புதிய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அவர் புதிதாக வீடுகட்டி முடித்து இருந்தார்.
இனிமேல்தான் கிரஹகப் பிரவேசம்.
யாத்திரிகர் தங்குவதற்கான எல்லா வசதிகளும் உள்ளன. யாத்திரிகர் அந்தப் புதிய வீட்டில் தங்கலாமா? எனக் கேட்டார்.
யாத்திரிகர் தங்குவதற்கான எல்லா வசதிகளும் உள்ளன. யாத்திரிகர் அந்தப் புதிய வீட்டில் தங்கலாமா? எனக் கேட்டார்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களும் பெரிதும் மகிழ்ந்து புதிதாகக் கட்டி முடிக்கப்பெற்றுள்ள வீட்டில் தங்கிக் கொள்ளச் இசைவு தெரிவித்தார். மின்மோட்டார் போட்டு யாத்திரிகர் அனைவரும் மோட்டார் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
அதிதி அன்னம் ஏற்ற ஆடி அமாவாசை -
அந்த புதிய வீட்டில் அந்த அன்பரும் அவரது மனைவியும் ஒன்றாகச் சேர்ந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களை வணங்கினார்கள். குருசாமி அவர்களை ஆசிர்வதித்தார். இன்று “ஆடி அமாவாசை, அதிதி (இன்னாரென அறியப்படாத, அறியமுடியாத) ஒருவருக்கு அன்னதானம் அளித்தால் சிறப்பு” என அந்தத் தம்பதியரிடம் குருசாமி சொன்னார்.
ஊருக்குப் புறத்தே புதிதாகப் பிளாட் போடப்பட்டு வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு இந்த வெயிலில் யாரும் வருவதற்கு வாய்ப்பு இல்லையே.
அதிதிக்கு எங்கே போவது? என்று அந்த அன்பர் குருசாமியிடம் சொல்லி வருந்திச் சொன்னார்.
மதியம் சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டது. யாத்திரிகர்கள் அனைவரும் மதிய உணவிற்காக வரிசையாக அமர்ந்தனர். அனைவருக்கும் உணவு பரிமாறிப்பட்டு “அரோகரா” சொல்லி முடித்துச் சாப்பிடத் துவங்கும் நேரத்தில், மிகவும் கிழித்த
மதியம் சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டது. யாத்திரிகர்கள் அனைவரும் மதிய உணவிற்காக வரிசையாக அமர்ந்தனர். அனைவருக்கும் உணவு பரிமாறிப்பட்டு “அரோகரா” சொல்லி முடித்துச் சாப்பிடத் துவங்கும் நேரத்தில், மிகவும் கிழித்த
அழுக்கான சட்டையுடன் சாலையில் நடந்து கொண்டிருந்த ஒருவரைக் குருசாமி அவர்கள் கண்டு விட்டார்.
“அதோ சாலையில் நடந்து செல்லும் அதிதியை அழைத்து வாருங்கள்” எனச் சொன்னார். அந்த அதிதியோ வேகவேகமாகச் சென்று கொண்டிருந்தார். ஆனாலும் அன்பரின் மனைவியோ மிகவும் வேகமாக ஓடிச் சென்று, அவர் முன்நின்று, அவரைச் சாப்பிட வருமாறு அழைத்தார். அந்த அதிதியும் அழைப்பை ஏற்றுவந்தார். சம்மணம் கூட்டி உட்கார்ந்தார், மதியஉணவு சூடாக இருந்தது. ஆனால் சூடுசோறு அவருக்குச் சூடாகத் தெரியவில்லை. அப்படியே சுடச்சுடச் சாப்பிட்டார். அடியேன் அந்த அதிதி சாப்பிடும்போது குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொடுக்கும் பாக்கியம் பெற்றேன். அதிதி ஏதும் பேசவே இல்லை. சாப்பிட்டு முடித்தவுடன், உணவு அளித்த அந்தத் தம்பதியரைக் கைகளால் ஆசிர்வதித்தார். அவ்வளவுதான் பழையே வேகத்தில் வேகவேகமாக நடந்து சென்றுவிட்டார். எல்லாம் வேகவேகமாக நடைபெற்றது. மாடியில் உள்ள அறையில், பேட்டரி சார்ஸ் போட்டிருந்த அலைபேசியை எடுத்துப் படம் எடுக்க இயலாமல் போனது.
அந்த அதிதி சம்மணம் கூட்டி உட்கார்ந்து மிச்சம் வைக்காமல் உணவு முழுவதையும் திருப்தியாக உணவு உண்டதைக் கண்ட எங்கள் அனைவருக்கும் மனதிற்கு நெகிழ்சியாகவும் வியப்பாகவும் இருந்தது.
அந்த அதிதி சம்மணம் கூட்டி உட்கார்ந்து மிச்சம் வைக்காமல் உணவு முழுவதையும் திருப்தியாக உணவு உண்டதைக் கண்ட எங்கள் அனைவருக்கும் மனதிற்கு நெகிழ்சியாகவும் வியப்பாகவும் இருந்தது.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வீட்டிற்குள் நுழைத்வுடன் அருளிச் செய்தபடி, ஆடி அமாவாசை நாளான இன்று அதிதி ஒருவர் வந்து மதிய உணவு சாப்பிட்டுச் சென்ற காரணத்தினால், அந்தத் தம்பதியர் பெரிதும் மகிழ்ந்தனர். இவ்வாறு நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இதற்காக அந்த தம்பதியர் குருசாமி அவர்களைப் பெரிதும் போற்றி வணங்கினர். குருசாமி பச்சைக்காடி அவர்களும் இது உங்களது முன்னோர்களின் நல்லாசியால் விளைந்தது. இனிமேல் உங்களுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும், உங்களது பெண்குழந்தைகள் இருவரும் மருத்தும்படித்துச் சிறந்த மருத்துவர் ஆவார்கள் எனக்கூறி ஆசிர்வதித்தார்.
ஓய்வு.
https://goo.gl/maps/q9bhcZyuEpC9DxsR6
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ.
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
-----------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக