பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் .....
இன்று 35 ஆவது நாள், ஆனி 28 ( 12.07.2017) புதன் கிழமை.
வேடசந்தூர் அருள்மிகு ஐயனாரப்பன் கோயிலில் இருந்து அதிகாலை மணி 2.20க்கு வழக்கம்போல் வழிபாடு செய்து ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.
வழியில் சாலையோரம் உள்ள ஒரு வீட்டில் அமர்ந்து, காலை மணி 7.15 அளவில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.
வழியில் சாலையோரம் தண்ணீர் ஓடையில் இந்தக் கல்லைக் கண்டேன். இது கல்லா? கல்மரமா? என்ற ஐயம் எனக்கு. அருகில் உள்ள காட்டிலிருந்த மரம் ஒன்று பிரளயகாலத்தில் உண்டான கடல்வெள்ளத்தால் அடித்துவரப்பட்டு பூமிக்குள் புதையுண்டு கல்மரமாக மாறியிருக்கிறது. இதைப் புவியியலாளர்கள் ஆய்வு செய்திட வேண்டும். கூடுதலான படங்களுடனான விளக்கம் இணைப்பில் உள்ளது.
https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/01/blog-post_25.html
https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/01/blog-post_25.html
காலை மணி 9.00க்கு அய்யலூர் M.P. திருமண மண்டபத்தை அடைந்தோம். நன்கு வசதியாகத் தங்கினோம்.
காலை உணவு.
ஓய்வு.
குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அடியார்கள் இருவர் வந்திருந்து மதிய உணவு அளித்துச் சிறப்புச் செய்தனர்.
மதிய உணவிற்குப் பிறகு ஓய்வு.
மாலை மணி 4.30 அளவில் வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிடுப் பாதயாத்திரையைத் தொடங்கினோம்.
நடுப்பட்டியை அடுத்துள்ள வழிவிடு வேல்முருகன் பழனிப் பாதயாத்திரை அடியார்கள் தங்கும் விடுதியில் இரவு தங்கினோம். தைப்பூசம் பழனிக்குப் பாதயாத்திரை செல்பவர்கள் தங்கிச் செல்வதற்காக இந்த விடுதியைக் கட்டியுள்ளனர். இந்த விடுதியின் உரிமையாளர் பழனிக்குப் பாதயாத்திரை செல்லும்போது இந்த இடத்தில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதி ஏதும் இல்லாமல் சிரமமாக உள்ளதே என மனம் வருத்தி, பழனி பாதயாத்திரை அடியார்கள் வசதியாகத் தங்கிச் செல்லும் வகையில் இந்த மண்டபத்தைக் கட்டியுள்ளனர்.
இரவு உணவு.
ஓய்வு.
https://goo.gl/maps/SG3JfQKAagkMGuF2A
இன்றைய பயணம் சுமார் 38 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக