வியாழன், 9 ஜூலை, 2020

10.07.2014 காசி பாதயாத்திரை - 46ஆம் நாள் - ஆனி 26

காசி பாதயாத்திரை - பயணக் கட்டுரை - பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 46ஆம் நாள் - ஆனி 26 (10.07.2014) வியாழக் கிழமை.  
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 
நேற்றுமுன்தினம் பாமிடி என்ற ஊரில் பாண்டுரங்கன் விட்டலர் கோயிலில் உள்ள கல்யாணமண்டபத்திற்கு வந்து சேர்ந்து  தங்கியிருந்தோம்.

இன்று  அதிகாலை மணி 3.30 அளவில் காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு பாமிடியில் இருந்து புறப்பட்டோம்.  

6.29 am
காசிஸ்ரீ சிவப்பாவிற்கு நேற்று இருந்த காய்ச்சல் இன்று சரியாகிவிட்டது. அவரும் யாத்திரையில் எங்களுடன் சேர்ந்து நடந்தார்.  நேற்று அவருக்கு இருந்த உடல்நிலையில் இன்று அவரால் நடக்க முடியாது என்று நினைத்திருந்தேன்.  ஆனால் எவ்விதமான சுகவீனமும் இல்லாமல் சிவப்பா அவர்கள் நல்லபடியாக நடந்து வந்தார்.

7.02 am

7.04 am
காலை மணி 7.00 அளவில் சாலைவரி வசூல்மையம் (Toll Plaza) அருகே சாலையோரம் ரொட்டி தேநீர் சாப்பிட்டுவிட்டு நடைப்பயணத்தை மேற்கொண்டோம்.    சிறிது நேரத்தில் கூட்டி என்ற ஊரில் மலைமேல் மிகப் பெரிய கோட்டை தெரிந்தது.  மலைமேல் உள்ள கோட்டையை உற்றுப் பார்த்தபடியே நாங்கள் நடைப்பயணம் மேற்கொண்டோம்.

7.33 am



கடுமையான வெயில்.
வேகமாக நடப்பவர்கள் விரைவாக நடந்து சென்று விட்டனர்.  நாங்கள் சிலர் தொடர்ந்து 7மணிநேரம் நடப்பதால் மிகவும் களைத்துப் போனாம்.  மிகவும் மெதுவாக நடந்து சென்றோம்.  

8.50 am
அப்போது காசிஸ்ரீ சரவணன் அவர்கள்  சாலையோரம் இருந்த ஒரு செடியைக் காட்டி இதுதான் “பேய் மிரட்டி” என்று கூறினார்.  இதன் இலையைத் திரிபோல் சுருட்டி வைத்துத் தீபம் ஏற்றலாம் என்றார்.  உடனே நாங்கள் அந்தச் செடியின் இலைகள் சிலவற்றைப் பறித்து எடுத்து வைத்துக் கொண்டோம்.  

 பசுபள்ளி (Bachupalli) ஸ்ரீ பட்ட சூங்காளம்மன் கோயிலில் ஒரு மண்சிட்டியில் நல்லெண்ணை ஊற்றி இந்தப் பச்சையாக உள்ள இலையை அப்படியே திரிபோல் சுருட்டித் தீபம் ஏற்றினோம்.  தீபம் அருமையாக ஒளிவிட்டு எரிந்தது. கூடுதலான படங்கள் இந்த இணைப்பில்உள்ளன.  https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2018/07/blog-post.html

9.24 am
மந்தராலயம் செல்வதற்குப் பாதை இங்கிருந்து பிரிந்து செல்கிறது.  ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமியை மனதில் நினைந்து வணங்கிக் கொண்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.

9.32 am
கூட்டி (Qooty ) என்றால் கோட்டை என்று பொருளாம்.  சிறிய குன்றின் மேல் மிகப்பெரிய கோட்டை உள்ளது.   (https://ta.wikipedia.org/wiki/கூட்டி).  நாங்கள் கூட்டி ஊருக்குள் போகாமல் புறவழிச்சாலை வழியாக நடந்து சென்றோம்.

11.04 am

11.06 am
காலை மணி 11.10 அளவில் பசுபள்ளி (Bachupalli) ஸ்ரீ பட்ட சூங்களம்மன் கோயில் (Sri Baata Sunkalmma Temple) வந்து சேர்ந்தோம்.  குரங்குகள் அதிகமாக இருந்தன.  மாலைநேரம் அம்மனை வழிபாடு செய்து கொண்டோம்.  சாலையில் பயணம் செய்வோர் மிகுதியான எண்ணிக்கையில் இந்த அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.  

மதிய உணவு.
ஓய்வு.

https://goo.gl/maps/SpZj9JyQ86rnnRPu8
இன்றைய பயணம் சுமார் 27 கி.மீ .

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக