நாட்டியப் பேரொளி -
ஆடலில் யார் சிறந்தவர் என அன்னைக்கும் அப்பனுக்கும் போட்டி.
ஆட்டத்தின் போது கீழே விழுந்த காதணியை ஆடிக்கொண்டே தன் காலால் எடுத்துத் தன் காதில் மாடிக் கொண்டே ஆடினான் அப்பன். தலைவரை காலைத் தூக்கியாட நாணம் கொண்டு, அவ்வாறு ஆடுவதைத் தவிர்த்தாள் அன்னை. இதனால் தாளம் தப்பியது. அன்னை ஆட்டத்தில் தோல்வியுற்றாள் என்றானது.
பெண்களுக்கே உரிய நாணத்தினால் உண்டான இந்தத் தோல்வியை அன்னையின் அடியார்கள் ஒத்துக் கொள்வார்களா? இதோ அப்பனைப் போல் நாங்களும் ஆடிக் காட்டுவோம் என்று ஆடிக்காட்டுகிறாள் ஆடல்வல்லாள் கூத்தி ஒருத்தி.
குஞ்சித பாதம் -
குஞ்சி என்றால் “ஆண்களின் தலைமுடிக் கொண்டை” என்று பொருள்.
குஞ்சி என்றால் “ஆண்களின் தலைமுடிக் கொண்டை” என்று பொருள்.
தலையைத் தொடும் படி (குஞ்சியைத் தொடும்படி) காலைத் தூக்கி ஆடியதால், அதைக் குஞ்சிதபாதம் என்கின்றனர். காலைத் தலைவரை தூக்கி நடராசனைப் போன்று ஆடிக்காட்டும் கூத்தியாளின் குஞ்சிதபாத முத்திரையைச் சிதம்பரம் நடராசர் கோயில் கிழக்கு வாயிலில் சிற்பமாக வடித்துள்ளனர்.
(மதுரை புதுமண்டபத்தில் குஞ்சிதபாதம்)
கூத்து ஆடுபவர்களைக் கூத்தி என்றும்,
வேசம் போடுபவர்களை வேசி என்றும்,
கோயிலுக்கு அடிமையாக ( கிருத்துவத்தில் கன்னிகாஸ்திரி போல்) வேலை செய்பவர்களைத் தாசி என்றும்,
பணத்திற்காக உடற் சுகம் கொடுப்பவர்களைப் பரத்தை என்றும் குறிப்பிடுவர்.
ஆனால் எந்தப் பெண்ணும் யாருக்கும் அடிமை யல்ல.
அன்னியர் ஆட்சியில் சண்டாளர்கள் பெண்டுகளை ஆண்டு பெண்டாளர்களாகிப் போயினர். அதனால் தாசியும் வேசியும் கூத்தியும் போகப் பொருளாக மாற்றப்பட்டுப் பெண்ணடிமை செய்யப்பட்டனர்.
சிதம்பரம் சென்று ஆடல்வல்லானை வழிபடும் முன்னர், ஆடல்வல்லானின் ஆட்டத்திற்கு இணையாகக், கிழக்குவாயில் தூணில் நின்றாடும் இந்த ஆடல்வல்லாளையும் கண்டு வணங்கிடுவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைரசான்
-----------------------
(நாட்டியப் பேரொளியின் படம் - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையின் போது, யாத்திரையின் 48 ஆவது நாளான, ஆடி 9 ( 25.07.2017) செவ்வாய்க் கிழமை அன்று சிதம்பரம் கோயில் வழிபாட்டின் போது எடுக்கப்பட்டது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக