ஞாயிறு, 5 ஜூலை, 2020

05.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 28ஆவது நாள், ஆனி 21

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  28ஆவது நாள், ஆனி 21 (05.07.2017) புதன் கிழமை.
08.06.23017 அன்று பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று முன்தினம் திருவேடகம் வந்து தங்கியிருந்தோம்.

இன்று காலை 2.05 மணிக்குத் திருவேடகத்தில் இருந்து யாத்திரை புறப்பட்டோம்.  


சாலையோரம் இருந்த கடையில் யாத்திரிகர் அனைவரும் காத்திருந்தோம்.  அன்னதான வண்டி வருவதற்குச் சற்று காலதாமதம் ஆனது.  யாத்திரிகர் சிலர் படுத்துத் தூங்கிவிட்டனர்.  காலை மணி 7.10 அளவில்  ரொட்டி தேநீர் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.


இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நீளம் சுமார் 2,00,000 கி.மீ.
எவ்வளவு மழை பெய்தாலும் சிறிதளவுத் தண்ணீர்கூடச் சாலையில் தேங்கி நிற்காதவாறு வடிகால் வசதியுடன் சாலையை அமைத்துள்ளனர்.  சாலையில் விழும் மழைத் தண்ணீரெல்லாம் வழிந்தோடி விடுகிறது.  இவ்வாறு சாலை யோரங்களில், சிறுமழை பெய்தாலும் சிறிதளவு தண்ணீர் நிற்கும் இடங்களில் எல்லாம் பெரும்பூசணி விதையை ஊன்றி வைக்கலாம்.  ஊன்றிட இயலாவிட்டால் சும்மா விதைத்து விடலாம்.  இவ்வாறு செய்தால் சுமார் 4 மாதங்களில் பூசணிக்காய் காய்த்துச் சாலையோர மெங்கும் நிறைந்து கிடக்கும். 

பெரும்பூசணிக்கு நீர்மேலாண்மை என்பது தேவையில்லாதது.  அதுவாகவே கிடைக்கும் நீரைக் கொண்டு வளர்ந்து படர்ந்து விடும்.  பாதுகாப்புக் கருதி, சாலை ஓரங்களில் யாரும்  ஆடுமாடுகளை மேய்ப்பதும்  இல்லை.  அப்படியே மனிதர்களோ மிருகங்களோ இதைப் பயன்படுத்தினாலும்  நஷ்டம் ஏதுமில்லை.  

பெரிய முதலீடு ஏதும் செய்யாமல், நான்கு மாதங்களில் ஓராண்டிற்கான விளைச்சல் கிடைத்துவிடும்.  இந்தப் பூசணியைச் சும்மா வீட்டில் வைத்திருந்தாலே போதும்,  சுமார் 6 மாதங்களுக்கும் மேலாகக் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.   எனவே, எப்படிப் பார்த்தாலும், முதலீடு தேவையில்லை, தண்ணீர் தேவையில்லை, வேலி பாதுகாப்புத் தேவையில்லை,  சேமித்து வைப்பதற்கான வசதி ஏதும் தேவையில்லை.   ஆனால் உற்பத்தியோ அதிகமாக இருக்கும்,  ஓராண்டிற்கு காய்கறித் தேவையைப் பெரிதும் பூர்த்தி செய்து விடலாம் என்ற சிந்தனையுடன் நடந்து சென்றோம்🙃- https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/06/blog-post_64.html

காலை 7.30  மணிக்குக் கொடைரோடு பயணியர் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.
8.30 மணிக்கு காலை உணவு.


பத்திரிக்கைச் செய்தியாளர்கள்  தொலைக்காட்சிச் செய்தியாளர்கள் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் மற்றபிற யாத்திரிகர்களையும், குருசாமியிடம் ஆசிவாங்க வந்திருந்த அன்பர்களையும் பேட்டி எடுத்தனர்.










யாத்திரிகர் சிலர் மட்டும், மாலை நேரத்தில் பயணியர்விடுதிக்கு அருகேயுள்ள  கொடைரோடு அருள்மிகு ஸ்ரீகுருநாதசுவாமி, ஸ்ரீ அங்காள பரமேசுவரி திருக்கோயில் சென்று வழிபாடு செய்தோம். மிகவும் பழைமையான கோயில். கோயில் விதானங்களில் பாண்டியர்களின் இரட்டை மீன் சின்னத்தைக் காண முடிந்தது.  கோயில் இடங்களில் எல்லாம் கடைகள் இருந்தன.  கோயில் சிறுத்துக் கடைகள் பெருகி இருந்தன.    


https://goo.gl/maps/DjCi8fiDW3dxZ9iZA
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக