புதன், 29 ஜூலை, 2020

30.07.2014 காசி பாதயாத்திரை - 66ஆம் நாள் - ஆடி 14

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம். 
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று சதாசிவநகரில் உள்ள “ஸ்ரீ வாணி வித்யாலயம்” வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.

இன்று 66ஆம் நாள் - ஆடி 14 (30.07.2014) புதன் கிழமை. 

இன்று முழுதும் ஓய்வு.



பள்ளி வளாகத்தில் பார்ப்பதற்கு அது ஒரு வீடு போன்று இருந்தது.  ஆனால் அது ஒரு ஆலயம்.  மாலை நேரத்தில் யாத்திரிகர்கள் சிலர் சென்று வழிபாடு செய்து வந்தோம்.



காஞ்சி மகாப் பெரியவரின் திருவருளும், குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக