வெள்ளி, 10 ஜூலை, 2020

11.07.2014 காசி பாதயாத்திரை - 47ஆம் நாள் - ஆனி 27

காசி பாதயாத்திரை - பயணக் கட்டுரை - பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 47ஆம் நாள் - ஆனி 27 (11.07.2014) வெள்ளிக் கிழமை.  
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று பசுபள்ளி (Bachupalli) ஸ்ரீ பாட்ட சூங்களம்மா கோயில் (Sri Baata Sunkalmma Temple)வந்து சேர்ந்து  தங்கியிருந்தோம்.

இன்று  அதிகாலை மணி 3.30 அளவில் காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு கோயிலில் இருந்து புறப்பட்டோம்.  

நான்குவழிச் சாலை அமைக்கும்போது  சாலைகளின் நடுவே தடுப்புச் சுவர் அமைத்துள்ளனர்.  இதனால் அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால், நீண்ட தொலைவு சென்று திரும்பி வரவேண்டியுள்ளது.  இருசக்கர வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல உயிரைப் பணயம் ஒருவழிச்சாலையின் எதிர்புறம் பயணிப்பதைக் காண முடிந்தது. https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2018/03/blog-post_9.html


6.53 am
6.53 am
பியாபள்ளி (peapully) சோதனைச்சாவடி அருகே காலை 7.00 மணி அளவில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.
7.18 am
7.37 am

7.50 am
7.58 am
8.16 am
இரவு மழை பெய்துள்ளது.  இதனால் இதமான குளிர்ந்து காற்று வீசிக் கொண்டிருந்தது.  நடைப்பயணம் இனிமையாக இருந்தது.
8.41 am
8.41 am
8.50 am
பியாப்பள்ளி வழியாக ஏணுகுமாரி (Zphs school, Enugumarri, Mettupalle,) என்ற ஊரில் புறவழிச் சாலை அருகே உள்ள ஜில்லா பரிசத் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தோம்.  காலை மணி 8.50 அளவில்  அந்தப் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் விளையாட்டுத் திடலில் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருந்தனர்.
8.52 am

8.55 am
கடல்கோள் பற்றிய இலக்கியப்பதிவுகள் தமிழில் நிறைய உள்ளன.  திருவிளையாடற் புராணமானது மதுரையுடன் தொடர்புடைய நான்கு கடல்கோள்களைப் பதிவு செய்துள்ளது.  கடல்கோளால் உண்டான கடல்வெள்ளம் (சுனாமி) கரையைக் கடந்தபோது உண்டான கடற்களிமண் இறுகிப் பாறைகளாகி உள்ளன.  இந்தக் கருத்திற்குச் சான்றாக, ஆந்திராவில்  ஏணுகுமாரி மற்றும் மெ(மே)ட்டுப்பள்ளி ஊர்களில் காணக்கிடைக்கும் பாறைகள் உள்ளன.  https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/07/blog-post_91.html


9.26 am
காலை மணி 9. 10 அளவில்  ஏணுகுமாரி (Zphs school, Enugumarri, Mettupalle,) ஜில்லா பரிசத் பள்ளிக் கூடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  மாணவர்களுக்கு மிகவும் நல்லமுறையில் மதியஉணவு வழங்கினர்.

2.50 pm
வகுப்புகள் முடிந்து மாணவர்கள் பள்ளியை விட்டுச் செல்லும் வரை மரத்தடியில் தங்கியிருந்தோம்.   பள்ளிமுடிந்து மாணவர்கள் சென்ற பின்னர் வகுப்பறைகளில் தங்கினோம்.  பாம்புகள் நிறைய உண்டு.  எனவே கவனமாகத் தங்கியிருங்கள் என்று ஆசிரியர்கள் கூறிச் சென்றனர்.  எனவே யாத்திரிகர் அனைவரும் அவரவருடைய டார்ச்லைட்களை எடுத்து வைத்துக் கொண்டு, வகுப்பறையின் சன்னல் கதவுகளை யெல்லாம் மூடிவிட்டுத் தூங்கினோம்.  சிலர் பள்ளிக்கூடத்தின் மேல்தளத்திற்குச் சென்று படுத்துத் தூங்கினர்.

நாள் முழுவதும் மின்சாரம் இல்லை.  கும் இருட்டில் இரவு கழிந்தது.  அலைபேசிகளுக்குப் பேட்டரி சார்ஸ் போடமுடியாமல் போனது.  டார்ச்லைட் வெளிச்சத்தில் இரவு உணவு.

ஓய்வு.


https://goo.gl/maps/BTK2aDAMd7382hgL7
இன்றைய பயணம் சுமார் 22கி.மீ .
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக