காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, பயணத் திட்டத்தில் ஒரு சிறிய மாற்றமாக 21.07.2014 நேற்றே “பாலமாகுள” என்ற ஊர் வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.
இன்று 58ஆம் நாள் - ஆடி 6 (22.07.2014) செவ்வாய்க் கிழமை.
அதிகாலை 4.10 மணிக்கு தினசரிவழிபாட்டை முடித்துக் கொண்டு, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுபிட்டுவிட்டு காகன்பேடு என்ற ஊருக்குப் பயணம் புறப்பட்டோம்.
சாலையோரம் அமர்ந்து காலையில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
சம்சாபாட் என்ற ஊர் வழியாக காகன்பேடு என்ற ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு 8.50 க்கு வந்து சேர்ந்தோம் .
காலை உணவு .
ஓய்வு .
வழிநெடுகிலும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்தது.
https://goo.gl/maps/TgWRiK2SF8dDkd1n6
இன்றைய பயணம் சுமார் 18 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக