அட்டக்கல், ஊரும் பேரும்
காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று வில்லியம்கொண்டா பள்ளிக்கூடம் வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
9.36 am
காலை மணி 9.40 அளவில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடகல் (Addakal) என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். சாலையோரம் உள்ள பள்ளியில் தங்கினோம். அன்பர் ஒருவர் வந்து யாத்திரிகர்களை வரவேற்றார். அங்கே தங்கி ஓய்வு எடுத்து மறுநாள் அதிகாலையில் யாத்திரையைத் தொடர்ந்தோம்.
ஊரைச் சுற்றிலும் சிறுசிறு மலைக் குன்றுகள், நீர்நிலைகள், காடுகள், பசுமையான வயல்கள் என மிகவும் இயற்கையா சூழ்நிலையில் அந்த ஊர் உள்ளது. தனமைய்யா மலைகள் (தனமைய்யா குட்டா என்றும் அழைக்கப்படுகின்றன). அங்கு வாழ்ந்ததாக நம்பப்படும் தனமைய்யா (Dhanamayya) என்ற உள்ளூர் துறவி அல்லது ஆன்மீகப் பெரியவரின் நினைவாக சூட்டப்பட்டுள்ளது.
“தனமய்யா = தனம் + ஐயா” என்ற சொல், தெலுங்கு பக்திக் கவிதைகளில் (உதாரணமாக, விஷ்ணு / வெங்கடேஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தல்லபாக்க அன்னமாச்சாரியாரின் சங்கீர்த்தனங்களில்) காணப்படுகிறது. அதில் 'தன' என்றால் செல்வம்/புதையல் என்றும், 'ஐயா' என்பது மரியாதைக்குரிய ஒருவரை அல்லது இறைவனை அன்புடன் அழைக்கும் ஒரு சொல்லாகும்.
முக்கிய சிறப்பம்சங்கள்: மலை உச்சியிலிருந்து பரந்த காட்சிகளைக் காணக்கூடிய பிரபலமான உள்ளூர் இடமாக இது திகழ்கிறது; தெளிவான மற்றும் அழகான சூரிய உதயத்தைப் புகைப்படம் எடுக்கவும், காலை நேரக் காட்சிகளை ரசிக்கவும் மக்கள் இங்கு அடிக்கடி வருகின்றனர்; அமைதியான வெளிப்புறச் சூழலையும், இப்பகுதிக்கே உரித்தான பாறை நிலப்பரப்பில் எளிதான மலையேற்றப் பாதைகளையும் இது கொண்டுள்ளது.
அடகல் இந்த ஊரின் பெயரைத் தமிழில் உச்சரித்தால் அட்டகல் அல்லது அடைகல் என்று வருகிறது. அட்டகல் என்றால் “எட்டு(8)-கல்” என்றும் அடைகல் என்றால் “அடைக்கின்ற கல்” என்றும் பொருளாகிறது.
அட்டக்கல் ஊரின் கிழக்கே மிகப்பெரிய ஏரி (கண்மாய்) உள்ளது. அதற்கும் கிழக்கே 6 சிறுசிறு குன்றுகளும், வடக்கு 2 சிறுசிறு குன்றுகளும் உள்ளன. இவை மிகப் பெரிய கிரானைட் பாறைகள் ஆகும். அட்டம் என்றால் 8(எட்டு) என்று பொருள். கல் என்றால் கிரானைட் கல் ஆகும். மொத்தம் 8 பாறைக் குன்றகள் உள்ள காரணத்தினால் இந்த ஊருக்கு அட்டக்கல் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மதுரை யானைமலைக்கு அருகே அரிட்டாபட்டி என்றொரு ஊர் உள்ளது. அரிட்டடாபட்டி = அரி + அட்ட + பட்டி = அரியின் 8 பட்டிகள் = திருமாலின் 8 ஊர்கள் என்று பொருளாகிறது.
இதைப் போன்றே தெலுங்கானாவில் உள்ள ஒரு ஊரின் பெயர் அட்டக்கல் என்று வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சிறிது வியப்பாக இருந்தது.
தெலுங்கு மொழி தெரியாத காரணத்தினால் அங்குள்ளவர்களிடம் இந்த ஊரின் பெயருக்கான காரண காரியங்கள் குறித்து என்னால் கேட்டறிந்து கொள்ள இயலவில்லை.
