காசி பாதயாத்திரை - பயணக் கட்டுரை - பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 48ஆம் நாள் - ஆனி 28 (12.07.2014) சனிக் கிழமை.
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று ஏணுகுமாரி (Zphs school, Enugumarri, Mettupalle,) ஜில்லா பரிசத் பள்ளிக் கூடத்திற்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.
இன்று அதிகாலை மணி 4.10 அளவில் காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு ஏணுகுமாரி பள்ளிக்கூடத்தில் இருந்து பாதயாத்திரை புறப்பட்டோம்.
5.56 am
6.18 am
வழியில் காலைமணி 7.00 அளவில் கொத்தபள்ளி என்ற ஊர் அருகே காலை நேரம் ரொட்டி தேநீர் சாப்பிட்டோம்.
7.51 am
8.02 am
8.20 am
8.32 am
8.30க்கு உடுமலப்பாடு என்ற ஊருக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.
காலை உணவு.
9.11 am
எங்களைப் போல் ஒருவர் -
அப்போது எங்களைப்போன்றே, காவி உடைய அணிந்திருந்த சுவாமிஜி ஒருவர் வந்தார். எங்களது பயணம் பற்றி கேட்டு அறிந்து கொண்டார். அவர் 9 ஆண்டு களுக்கு முன்னர் 12 சோதிர்லிங்கங்களுக்கும் பாதயாத்திரை மேற்கொண்டு வணங்கி வந்ததாகச் சொன்னார். உடனே குருஜி அவரது பாதங்களை வணங்கிக் கொண்டு , யாத்திரிகர்களையும் வணங்கிக் கொள்ளச் செய்தார். அவரும் பெரிதும் மகிழ்ந்து, யாத்திரிகர் அனைவரையும் ஆசிர்வதித்தார். அவரது பயணத்தில் நடந்த சில அனுபவங்களைக் கூறி வியந்து பேசினார்.
யாத்திரிகர் அனைவரும் அருள்மிகு தத்தாத்ரேயர் சந்நிதியில் வழிபாடு செய்த கொண்டோம்.
தங்கல்.
மதிய உணவு.
அர்ச்சகரின் அன்பு -
மாலைநேரம் நல்ல மழை பெய்தது. குளிர்ந்த வாடைக் காற்று வீசியது.
யாத்திரிகர்கள் கோயில் வளாகத்தில் படுத்துத் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனே கோயில் அர்ச்சகர், அவருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த வீட்டைக் காலிசெய்து அவரது வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் வேறொரு அறையில் ஒதுக்கி வைத்து, யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்.
அருள்வாக்கு -
இரவு மணி 8.00 அளவில் எல்லோரும் அயர்ந்து படுத்துவிட்டனர். அப்போது கோயிலுக்கு வந்த ஒருவர் குருசாமி அவர்களைப் பார்த்து ஆசி பெற வேண்டும் என்று என்னிடம் கேட்டார். தனது தாய் தந்தை மற்றும் மனைவி மகனுடன் குடும்பமாக வந்திருப்பதாகவும் கூறினார்.
எல்லோரும் படுத்துத் தூங்கிவிட்டார்களே என்று கூறினேன். எங்களது பேச்சுச் சத்தம் கேட்ட குருசாமி பச்சைக்காவடி அவர்கள் எழுந்து என்ன என்று விசாரித்தார். அவர்களை அழைத்து ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் கொடுத்தார். 8 ஆண்டு களுக்கு முன்னர் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வழங்கிய அருள் வாக்குப்படியே தனக்கு இந்த மகன் பிறந்ததாக கூறி மனம் நெகிழ்ந்தார். அவரது தாய் தந்தையர் தங்களுக்குப் பேரன் பிறந்தது குருசாமி அவர்களின் திருவருளே என்றுகூறி குருசாமி பச்சைக்காவடி அவர்களின் கால்களைப் பிடித்து வணங்கிப் போற்றினர். குருசாமி அவர்களிடம் இது இங்குள்ள தத்தாத்ரேயர் திருவருளாகும் என்று கூறி அவர்களை ஆசிர்வதித்து மீண்டும் விபூதி பிரசாதம் கொடுத்தார்.
குருசாமி அவர்களிடம் இன்றைய தினம் நான் இங்கே வருகிறேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு பௌர்ணமி நாளில் கோயிலுக்கு வந்திருந்தேன். அப்போது எனக்குக் குழந்தை யில்லை. தாங்கள் எனக்குப் பையன் பிறப்பான் என்றுகூறி ஆசிர்வதித்தீர்கள். அப்படியே மகன் பிறந்தான். அதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் இந்தக் கோயிலுக்கு வந்து கும்பிட்டுச் செல்கிறேன்.
இன்று பௌர்ணமி. அதனால் கோயிலுக்கு வந்தேன்.
அன்னதான வண்டி கோயில்வாசலில் நிற்பதைப் பார்த்தேன்.
சுவாமிஜி வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்.
உடனே வீட்டிற்குச் சென்று மகன், கணவன், மாமியார், மாமனாரையும் உடன் அழைத்துக் கொண்டு வந்து தங்களிடம் ஆசி பெற வந்தேன் என்று கூறினார்.
இதைக் கேட்ட குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பெரிதும் மகிழ்ந்து, நடந்தன அனைத்தும் தத்தாத்ரேயர் திருவருளே ஆகும். அவரைத் தொடர்ந்து வழிபடுங்கள் உங்களது குடும்பம் மேன்மை அடையும் என்று கூறி ஆசிர்வதித்தார்.
உடனே வீட்டிற்குச் சென்று மகன், கணவன், மாமியார், மாமனாரையும் உடன் அழைத்துக் கொண்டு வந்து தங்களிடம் ஆசி பெற வந்தேன் என்று கூறினார்.
இதைக் கேட்ட குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பெரிதும் மகிழ்ந்து, நடந்தன அனைத்தும் தத்தாத்ரேயர் திருவருளே ஆகும். அவரைத் தொடர்ந்து வழிபடுங்கள் உங்களது குடும்பம் மேன்மை அடையும் என்று கூறி ஆசிர்வதித்தார்.
9.23 am
9.26 am
ஒருவர் சமையல் செய்ய, இருவர் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தனர். கோயிலில் பக்தர்கள் கூட்டமும் இருந்தது, குரங்குகள் கூட்டமும் இருந்தது.
ஒருவர் சமையல் செய்ய, இருவர் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தனர். கோயிலில் பக்தர்கள் கூட்டமும் இருந்தது, குரங்குகள் கூட்டமும் இருந்தது.
https://goo.gl/maps/h86ssCuEwrciFF399
இன்றைய பயணம் சுமார் 20 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
இன்றைய பயணம் சுமார் 20 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக