வெள்ளி, 3 ஜூலை, 2020

04.07.2014 காசி பாதயாத்திரை - 40ஆம் நாள் - ஆனி 20

பயணக் கட்டுரை -
இராமேசுவரம் - காசி பாதயாத்திரை - 
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 40ஆம் நாள் - ஆனி 20 (04.07.2014) வெள்ளிக் கிழமை.  
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 
நேற்று பாகேபள்ளி வந்து சேர்ந்து இருந்தோம்.

3.03 am
இன்று 04.07.2014 அதிகாலை 3.00 மணிக்கு தினசரி வழிபாடு முடிந்தவுடன் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு,  பாகேபள்ளி கீதா மந்திரில் இருந்து புறப்பட்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.  
5.35 am

6.11 am
வழியில் சாலையோரம் இருந்த பெட்ரோல்பங்கில் அமர்ந்து ரொட்டி தேநீர் சாப்பிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

7.14 am
காலை மணி 7.15 அளவில் புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் பிரிவுப்பாதை இருந்தது.  ஸ்ரீ சாய்பாபாவை நினைத்து வணங்கிக் கொண்டே யாத்திரையைத் தொடர்ந்தோம்.

7.15 am

8.17 am
வழியில் உள்ள மற்றொரு பெட்ரோல்பங்கில் அன்னதானவண்டியை நிறுத்தியிருந்தனர்.  அங்கே காலை உணவு சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

8.37 am

9.17 am

9.48 am





9.47 am
புலகுருளபள்ளி (Pullagurlapalli) என்ற ஊருக்குச் சற்று முன்னதாக உள்ள ஒரு கிராமத்தில் (NH 44 - Andhra Pradesh 515241 - 13.922671, 77.691000) காசிஸ்ரீ சிவாப்பாவிற்குச் சொந்தங்கள் பலரும்  வசிக்கின்றனர்.   காசிஸ்ரீ சிவாப்பாவும் யாத்திரிகர்களும் வருவதை அறிந்த ஊரார் பலரும் சாலையோரம் நின்று யாத்திரிகர்களை வரவேற்றனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவர்களை ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.



10.12 am
புத்தபள்ளி செல்லும் பிரிவு சாலை அருகே ஆற்றங்கரையோரம் ஒரு சிறிய ஆஞ்சனேயர் கோயில் இருந்தது.  சிவாப்பா மிகவும் பக்தியுடன் அந்த ஆஞ்சனேயசுவாமியை வணங்கிக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தார்.

10.39 am
10.48 am
காசிஸ்ரீ சிவாப்பா அவர்களின் நண்பர் பாலசமுத்திரம் ஊர் எல்லையில் வந்து நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார்.

10.54 am

பாலசமுத்திரம் எல்லையில் ஒரு சிறிய கோயில் சிதிலமடைந்து கிடந்தது.  அங்கே மிகப் பெரிய ஆலமரமும் வேப்பரமும்  இருந்தன.  அவற்றின் நடுவே நாகக் கன்னியை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

11.00 am
பாலசமுத்திரத்தில் காசிஸ்ரீ சிவாப்பா அவர்களின் உறவினர்கள் பலரும் வந்திருந்து சிவாப்பாவையும் யாத்திரிகர்களையும் வரவேற்றனர்.



11.05 am
ஜில்லா பரிசாத் மேல்நிலைப் பள்ளியில் (Zilla Parishad High School)  தங்கினோம்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆசிர்வதித்தார்.
மதிய உணவு.
ஓய்வு.



பள்ளிக்கு நேர் எதிரே ஒரு மசூதி உள்ளது.  மசூதியின் வாயிலில் ஆவுடையார் ஒன்று சிதைந்த நிலையில் கிடந்தது.  அந்த ஆவுடையாரில் நந்தியின் சிற்பம் பொறிக்கப்பட்டிருந்தது.  இந்த மசூதியானது பாலசமுத்திரம் கண்மாய் (அல்லது ஏரி)க் கரையில் இருந்தது.


https://goo.gl/maps/AFWrkKWUmoNA1Zbu5
இன்றைய பயணம் சுமார் 28 கி.மீ .
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக