திங்கள், 27 ஜூலை, 2020

28.07.2014 காசி பாதயாத்திரை - 64ஆம் நாள் - ஆடி 12

காஞ்சி மகாப் பெரியவர் காசிக்குப் பாதயாத்திரையாக, 1934 ஆம் வருடம் சென்றுள்ளார்....

ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் - பக்கம் 226...
இல் உள்ளபடி,
...ஸ்வாமிகள் அவ்வப்பொழுது அருளி உபதேச மொழிகளைக் கேட்டவர்களுமான அந்நகர் மக்கள், ‘இனித் தங்களுக்கு இத்தகைய வாய்ப்பு கிட்டுமோ?‘ என்ற மனக்கவலையுடன் ஆயிரக்கணக்கில் அன்று ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார்கள்.  ஸ்வாமிகள் ஒவ்வொருவருடனும் இரண்டொரு வார்த்தைகள் பேசி, அவர்கள் யாவருக்கும் மந்திராக்ஷதை தந்து அவர்களை ஆசீர்வதித்தார்கள். நகரத்திலுள்ள கோடீசுவரர்களும், அரசாங்க உத்தியோகஸ்தர்களும், பல தொழில்களில் ஈடுபட்டவர்களும், ஏழை மக்களும் ஒருங்கே சேர்ந்து அன்று ஸ்வாமிகளை வழியனுப்பிய காட்சி என்றும் மறக்முடியாததாகும் செகந்திராபாத்திலுள்ள பக்தர்களின் விருப்பப்படி ஸ்வாமிகள் அந்நகரத்தில் திவான் பகதூர் ராமகோபால் சேட்டின் பௌத்திரர் ஸ்ரீ கிஷன் சேட்டின் மாளிகையில் 23-ந் தேதி தங்கி, அவ்விடத்தில் பூஜையை முடித்துக்கொண்டு, நகர மக்களுக்குச் தரிசனம் கொடுத்துவிட்டு மறுநாள் அவ்விடமிருந்து புறப்பட்டார்கள்.

நைஜாம் ராஜிய வடபகுதியில் யாத்திரை
கோதாவரி ஸ்நானம்
1934-ஆவது வருடம் ஏப்ரல் மாதம் 24-ந்தேதி ஸ்வாமிகள் செகந்தராபாத்திலிருந்து புறப்பட்டு மேச்சல், தூப்ரான்,நரசிங்கி, பிக்னூர், காமரெட்டிபேட், இன்டல்வாய், டே ராஜபள்ளி மார்க்கமாகக் கோதாவரிக் கரையிலுள்ள சொண்ணா என்னும் இடத்திற்கு மே மாதம் 5-ந் தேதி விஜயமானார்கள்.  பம்பாய் மாகாணம் திரயம்பகம் என்னும் தலத்திற்கு அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற இந்தக் கோதாவரி நதியானது நைஜாம் சமஸ்தானத்தின் வழியாகப் பாய்ந்து பின்னர் ஆந்திர தேசத்தில் பிரவேசித்து, அந்நாட்டைச் செழிப்புறச் செய்யும் ஓர் புண்ணியநதியாகும்.  மிகப் புனிதமான இந்த நதியில் ஸ்வாமிகள் அன்று நீராடி, வேதமோதிய அந்தணர்களுக்குத் தானங்களை வழங்கினார்கள். மறுநாள் ஸ்வாமிகள் அவ்விடமிருந்து புறப்பட்டு நீர்மல், அதிலாபாத், மார்க்கமாக மத்திய மாகாணத்தைச் சார்ந்த பொண்டல்வாடா என்னும் இடத்திற்கு மே மாதம் 15-ந் தேதி விஜயமானார்கள்.  இவ்விடங்களிளெல்லாம் மக்கள் ஸ்வாமிகளுக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் செய்துகொடுத்துப் பிக்ஷை, பாதபூஜை முதலியவைகளை நடத்தி அதுவரை கண்டிராத ஸ்வாமிகளின் சந்திரமௌளீச்வரர் பூஜையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.  ஒவ்வொரு ஊரிலும் ஸ்வாமிகளின்...  தொடர்ச்சி பக்கம் 227....

(குறிப்பு - பிக்னூரின் மேற்குப் பகுதியில் சித்தராமேஸ்வரம் என்ற பெயரில் மிகப் பிரசித்தி பெற்ற சிவன்கோயில் உள்ளது.  இராமேசுவரத்தில் இருந்து சில முனிவர்கள் இங்கே வந்து இந்தச் சிவலிங்கத்தைப் பூசை செய்து வழிபட்டனர் என்றும்,  அதன் காரணமாகவே இந்தக் கோயில் சித்தராமேசுவரம் என்று அழைக்கப்படுகிறது என்றும் சொன்னார்கள்.  வலையபட்டி சித்தர் பச்சைக்காவடி அவர்களின் இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போது யாத்திரிகர்கள் அனைவரும் இன்று  ஆடி 12 (28.07.2014) இந்தக் கோயிலில்தான் தங்கி வழிபட்டுச் சென்றோம்.)
--------------------------------------------------------
காஞ்சி மகாப் பெரியவர் ஏப்ரல் மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில்  சென்ற அதே வழித்தடத்தில்,  வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் காசிபாதயாத்திரையும் அமைந்து இருந்தது.    காஞ்சிப் பெரியவரின் திருவடிகளை நினைந்து வணங்கி,  அந்த மகானின் திருவருளை வேண்டிக் கொண்டு,  பெரியவரின் வழித்தடத்தில் நாங்களும் நடந்து சென்றோம்.

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம். இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று நரசிங்கி என்ற ஊருக்கு வந்து தங்கி இருந்தோம்.




இன்று 64ஆம் நாள் - ஆடி 12 (28.07.2014) திங்கள் கிழமை. 
தினசரி வழிபாட்டை முடித்துக் கொண்டு ரொட்டியும் ஹார்லிக்சும் சாப்பிட்டுவிட்டு அதிகாலை மணி 3.50 க்கு நரசிங்கியில் இருந்து புறப்பட்டு யாத்திரையை தொடர்ந்தோம். 

5.04 am

6.04 am
காலை 6.00 மணிக்கு, வழியில் சாலையோரம் இருந்த ஒரு சிறு குன்றின்மேல் அமைந்துள்ள தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் கோயிலைக் கண்டு வணங்கிக் கொண்டு சென்றோம்.

6.22 am
வழியில் வழக்கம்போல காலை 6.30 மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக்கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

6.52 am

6.53 am

7.29 am

7.36 am
யாத்திரிகர்கள் சாலையோரம் நடந்து செல்லும்போது,  ரோந்துப் பணியில் இருந்து காவல்துறையினர் வந்து யாத்திரிகர்களை வழிமறித்து விசாரித்தனர்.  எங்கிருந்து வருகின்றீர்கள்? எங்கே செல்கின்றீர்கள்? எங்கே தங்குவீர்கள்? உங்களது குருசாமி யார்? உங்களது அலைபேசி எண் என்ன? என்பன போன்ற பல கேள்விகளைக் கேட்டனர்.  நீண்ட நேரத்திற்குப் பின்னர் எங்களது பதிலில் திருப்தி அடைந்தவர்களாகச் சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து,  அவர்களே மீண்டும் வந்து அவர்களது வண்டியை நிறுத்தி யாத்திரிகர்களின் வழியை மறித்தனர்.   எதற்காக மீண்டும் இவர்கள் வரவேண்டும்? என யாத்திரிகர் அனைவரும் சற்று குழம்பிப் போயினர்.

ஆனால் அவர்களோ,  வண்டியிலிருந்து ஒரு பெரிய பெட்டி நிறைய சுவை மிகுந்த ரொட்டிகளைக் கொடுத்துச் சிறப்புச் செய்தனர்.  இதைச் சற்றும் எதிர்பாராத யாத்திரிகர்கள் அனைவரும் வியந்து போனனோம்.   குருசாமி அவர்களிடம் சென்று கொடுங்கள் என்று சொன்னோம்.   உங்களது குருசாமி அவர்கள் சற்று தொலைவில் வந்துகொண்டிருக்கிறார்,  அவரிடம்தான் இதைக் கொடுத்தோம்.  அவர்தான் உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.  எனவே தயக்கம் ஏதுமில்லாமல் இந்த ரொட்டிப் பெட்டியை வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர்.
யாத்திரிகர்களிடன் மிகவும் அன்பு பாராட்டிய  கடமை தவறாத கண்ணியமான காவலர்களுடன் படம் எடுத்துக் கொண்டோம்.    இன்றைய யாத்திரையின் சிறப்பு நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

7.38 am

7.48 am

7.50 am
7.50 am

7.54 am

7.59 am

8.17 am

8.23 am
சாலையோரம் இருந்த பிகினூர் (Bhiknoor) பேருந்து நிறுத்தத்தில் காலை உணவு சாப்பிட்டோம்.

8.39 am
யாரோ ஒரு வழிப்போக்கர் யாத்திரிகர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அவரும் வந்து பேருந்து நிறுத்தத்தின் படிக்கட்டில் உட்கார்ந்தார்.  குருசாமி அவர்கள் அந்த வழிப்போக்கருக்கும் காலை உணவு வழங்கினார்.

8.42 am

8.43 am
தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பக்கம் பிக்னூர் (Bhiknoor) உள்ளது.  சாலையின் மேற்குப் பக்கம் சித்தராமேசுவரம் உள்ளது.  எனவே  யாத்திரிகர் யாரும் பிக்னூர் செல்ல வேண்டாம்.   பிக்னூருக்குப் பாதை பிரியும் இடத்தில் இருங்கள்,  எல்லோரும் வந்து சேர்ந்தபின்னர் ஒன்றாகச் சேர்ந்து சித்தராமேசுவரம் கோயிலுக்குச் செல்லலாம் என்று குருசாமி அவர்கள் கூறினார்.

8.55 am
குருசாமி அவர்கள் சொன்னபடி, பிக்னூர் ஊருக்குச் செல்லும் பிரிவுச் சாலை ஆரம்பிக்கும் இடத்தில் யாத்திரிகர் அனைவரும்  வந்து நின்று கொண்டிருந்தனர்.  ஒரேயொரு யாத்திரிகர் மட்டும் நெடுஞ்சாலையைக் கடந்து பிக்னூர் செல்லும் சாலையில் உள்ள விளக்குத்தூண் கீழே அமர்ந்து இருந்தார்.  
8.59 am
மற்ற பிற யாத்திரிகர்கள் திரும்பி வருமாறு அழைத்தவுடன் வந்து சேர்ந்து கொண்டார்.   இதனால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.  அந்த யாத்திரிகரும் வந்து சேர்ந்தவுடன் யாத்திரிகர் அனைவரும் ஒன்றாகச் சித்தராமேசுரம் கோயிலுக்குப் பயணம் ஆனோம்.  தேவையில்லாமல் சாலையைக் கடக்க வேண்டாம் என அந்த யாத்திரிகருக்குக் குருசாமி அவர்கள் அறிவுரை வழங்கினார்.
லேசான தூரல். யாத்திரிகர் சிலர் குடை பிடித்துக் கொண்டு நடந்தனர்.

9.00 am

9.06 am

9.07 am



9.07 am

9.07 am

9.13 am

9.20 am

9.21 am

9.22 am

9.25 am

9.25 am


9.26 am

9.27 am

9.30 am
காலை 9.30 மணிக்குச் சித்தராமேசுரம் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.
கோயில் வளாகத்தில் குருக்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டை யாத்திரிகர்கள் தங்குவதற்காக ஒதுக்கிக் கொடுத்தனர்.
அந்தக் கோயில் அர்ச்சகர் வந்திருந்து குருசாமி அவர்களிடம் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
யாத்திரிகர்கள் குளிப்பதற்கும் துவைப்பதற்கும் வசதியாகத் தண்ணீர்த் தொட்டி கட்டி வைத்திருந்தனர்.   யாத்திரிகர் அனைவரும் துவைத்துக் குளித்தனர்.

மதிய உணவு.
சில யாத்திரிகர்கள் மதிய உணவிற்கு முன்பு கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனர்.  சிலர் மாலை நேரத்தல் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனர்.
9.40 am

12.37 am



12.42 pm

12.42 pm

இராமேசுவரமும் சித்திராமேசுவரமும்
இராமேஸ்வரத்திலிருந்து வந்த சித்தர்கள் வழிபட்ட காரணத்தால் "சித்த ராமேஸ்வரம் " என்று பெயர் உண்டானது என்றனர் .  இக்  காரணத்தால் இராமேஸ்வரத்திலிருந்து வந்த எங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர் .

வடக்கு பார்த்த கோபுரம் .
கிழக்கு பார்த்த கோமுகம் .

காசியில் உள்ளது போன்று, இங்கேயும் சிவலிங்கத்தைத் தொட்டு வழிபட அனைவரையும் அனுமதிக் கின்றனர் .

கூட்டம் மிகவும் அதிகம் .  அடியேன் வழிபட்ட போது ஆவுடை முழுவதும் வழிபாட்டு பொருட்களால் நிறைந்து இருந்தது . ஆவுடைக்குள் எனது கையை விட்டுப் பார்த்த போது, என்னால் சிவலிங்கத்தைத் தொட்டு உணர முடியவில்லை .
சிவலிங்கம் தரையோடு தரையாக உள்ளது என்றனர் .


https://goo.gl/maps/8X3WTcBmW6CtvsUg8
இன்றைய பயணம் சுமார் 20 கி.மீ.

காஞ்சி மகாப் பெரியவரின் திருவருளும், குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக