வெள்ளி, 24 ஜூலை, 2020

25.07.2014 காசி பாதயாத்திரை - 61ஆம் நாள் - ஆடி 9

காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று முன்தினம் செகந்திராபாத்  ஊரில் உள்ள குஜராத் சேவாமந்திர் வந்து சேர்ந்து தங்கியிருந்தோம். 

இன்று 61ஆம் நாள் - ஆடி 9 (25.07.2014) வெள்ளிக் கிழமை.

 பயணத் திட்டத்தின்படி இன்று ஓய்வு நாள்.  செக்திரா செகந்திராபாத்  ஊரில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும்.  ஆனால் அடுத்து வரும்11 நாட்களும் தொடர்ச்சியாக பயணம் உள்ளதால் , இன்று ஓய்விற்குப் பதிலாக பயணம் மேற்கொள்ளலாம் எனவும் ,  இந்த ஓய்வை 11 நாளில் ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் முடிவானது.  எனவே, பயணத்திட்டத்தில் ஒரு சிறு மாற்றமாக,  இன்று ஓய்வு எடுக்காமல் யாத்திரை நடைபெற்றது.  செகந்திராபத்தில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு அத்திவெளி  சென்று சேர்ந்தோம்.

3.16 am
அதிகாலை 2.30க்கு தினசரி வழிபாட்டை முடித்துக் கொண்டு, ரொட்டியும் ஹார்லிக்சும் சாப்பிட்டு விட்டு யாத்திரைக்குத் தயார் ஆனோம்.  அன்னதான வண்டியின் ஓட்டுநர் வண்டியில் வைத்திருந்த அலைபேசியைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்தார்.   கடைசிவரை அலைபேசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.   யாரோ வண்டிக்குள் கையை விட்டு எடுத்துச் சென்றிருக்க வேண்டும் எனக் கூறினார்.  இதனால் யாத்திரை அதிகாலை 3.16மணிக்குப் புறப்பட்டது.

இன்று காலையில் செகந்திராபாத்தில் சில யாத்திரிகர் பாதை மாறி பயணம் செய்த காரணத்தால் 2 கி.மீ. சுற்றி வந்தனர் ...

5.13 am
அதிகாலை மணி 5.13க்கு நாக்பூர் 474 கி.மீ. என்ற தகவல் பலகையைப் பார்த்து மகிழ்ந்து நடந்து சென்றோம்.

இன்று அதிகாலை கிழக்கில் சூரியனுக்கு மேல் பிறைச் சந்திரனும்  அதற்கும் மேலே வெள்ளியும் இருந்தன.  இதே போன்ற அமைப்பு 26.05.2014 அன்று இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி மண் சேகரிக்கும் போதும் இருந்தது .


6.07 am
சாலையில் நடந்து செல்லும்போது  ஒரு கோயில் கோபுரம் கண்ணுக்குத் தென்பட்டது.   அந்தக்   கிராமதெய்வத்தை வணங்கிக் கொண்டு, இந்தக் கிராம எல்லைக்குள் யாத்திரிகர்களைக் காத்தருள வேண்டும் என்ற வேண்டிக் கொண்டு நடைப்பயணத்தை மேற்கொண்டோம்.

6.13 am
வழியில் 6.30 மணி யளவில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.  



7.38 am
காலை மணி 8.30 க்கு ஒரு சிறு சிவன் கோயிலில் காலை  உணவு .

9.03 am
காலை மணி 9.00 அளவில், நாக்பூர் 475 கி.மீ., களகல் 8 கி.மீ. தொலைவு என்ற மயில் கல்லைப் பார்த்து காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் வியந்து போனார்.  
காலையில் 5.15க்கு நாக்பூர் 474 கி.மீ. என்று போட்டிருந்த தகவல்பலகையைப் பார்த்தோம்.  இப்போது மணி 9.00 ஆகிவிட்டது.  சுமார் 4 மணிநேரம் நடந்துள்ளோம்.  இவ்வளவு தொலை நடந்து வந்தபிறகு, தொலைவு குறையாமல் 1 கி.மீ. கூடுதலாகி, நாக்பூர் 475 கி.மீ. என்று போட்டுள்ளதே என்று காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் வியந்து போனார்.  இதுவரை வந்த தொலைவையும் இன்றும் செல்லவேண்டிய தொலைவையும் காசிஸ்ரீ சரவணன் அவர்களுடன் கணக்குப் போட்டுக் கொண்டே  இருவரும் நடந்தனர்.

10.08 am

10.15 am

10.32 am

10.33 am

11.12 am

பிள்ளையார் சதுர்த்திக்காகப் பிள்ளையார் உருவங்கள் செய்து விற்பனைக்காக வைத்திருந்தனர்.

11.17 am

குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும்  அத்திவெளி பேருந்துநிறுத்தம் அருகே காய்கறிகள் வாங்கினர்.   அந்தக் காய்கறிகளைக் காசிஸ்ரீ சரவணன் அவர்கள் தலையில்  சுமந்து கொண்டு வந்து அன்னதான வண்டியில் சேர்த்தார்.

11.27 am

11.29 am

11.29 am

11.31 am

11.33 am
கோயில் வளாகத்தில் பள்ளிக்கூடம் அமைத்துள்ளனர்.  சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் பேருந்து நிலையங்கள் மற்றும் அரசுநிறுவனங்கள் அனைத்தும் அந்தந்த ஊரின் கோயில் இடங்களாகத்தான் உள்ளன.  அந்த வகையில் அத்திவெளி கோயிலும், ஜில்லா பரிஷத் பள்ளியும் ஒரே இடத்தில் அடுத்தடுத்து உள்ளன.   

11.46 am

இரவு யாத்திரிகர் அனைவரும் அத்திவெல்லி கோயில் மண்டபத்தில் தங்கியிருந்தோம்.
ஓய்வு.



https://goo.gl/maps/dHxwvmNDvQvLJ9Fi8
இன்றைய பயணம் சுமார் 28 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக