புதன், 1 ஜூலை, 2020

02.07.2017 அறுபடைவீடு - பாதயாத்திரை - பயணக் கட்டுரை - 25ஆவது நாள், ஆனி 18

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  25ஆவது நாள், ஆனி 18 (02.07.2017) ஞாயிற்றுக் கிழமை.
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று பந்தல்குடி வந்து சேர்ந்தோம்.

வலையன்குளத்தில் இருந்து இன்று காலை மணி 3:10 க்குப் புறப்பட்டோம். காலை மணி 6.00 அளவில் சிப்காட் தொழிற்சாலை வளாகத்திற்கு வந்து சேர்ந்தோம். 

கப்பலூரில் கொப்பனாபட்டு திரு . பழனியப்பன் அவர்கள் வரவேற்று அவரது நூற்பாலைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். 
7.10க்கு மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

காலை 8.10 மணிக்கு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூத்தியார்குண்டு திரு அக்கின்ராசு எம்.பி. அவர்களது வீடு வந்து சேர்ந்தோம் . 
அவரது மகன்களில் இருவர் அங்கேயிருந்து யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.

எம்.பி. அவர்களது வீட்டில் தங்கல்.
மணி 8.30 அளவில் காலை உணவு.
ஓய்வு.

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் பெரிய கண்மாய் உள்ளது.  இங்கிருந்து பார்த்தால் திருப்பரங்குன்றம் பசுமலை நாகமலை ஆகிய மூன்று மலைகளும் நன்றாகத் தெரிகின்றன.


மாலை மணி 4.00 அளவில் சில அடியார்கள் மீனாட்சியம்மன் ஆலயத்திற்குச் சென்றுவழிபட்டு வந்தோம்.

கூத்தியார்குண்டு ஒரு வரலாற்றுச் சிறப்புடன் தொடர்புடைய ஊர். மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலில் நடனமாடும் கூத்தி ஒருத்திக்கு நிவந்தமாக வழங்கப்பட்டது இந்தக் கண்மாய் என்று கூறினர்.  இதனால் இந்த ஊருக்குக் கூத்தியார்குண்டு என்ற காரணப்பெயர் உண்டாகியதாம்.  இதற்கு முன் இந்த ஊருக்குச் சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்துள்ளது.
கூத்தியார்குண்டில் அருள்மிகு மீனாட்சியம்மன் உடனமர் சுந்தரேசுவரர் கோயில் உள்ளது.
திருமலை நாயக்கர் பதிவி யேற்றவுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் புனர்நிர்மாணம் செய்வதற்கு முன்பு  இந்தக் கோயிலைக் கட்டினான் என்கின்றனர்.  இராணி மங்கம்மாள் இந்தக் கோயில் வழிபாட்டிற்கு முறையாக வந்து செல்வதுண்டாம். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை மீனாட்சி ஆலயத்தில் நடைபெற்ற அத்தனை விழாக்களும் இங்கம் நடைபெற்றுள்ளன. இந்தத் திருக்கோயில் பற்றிய பதிவை இத்துடன் இணைத்துள்ளேன். 
https://temples-kalairajan.blogspot.com/2018/06/blog-post_50.html

இரவு நேர வழிபாட்டிற்குப் பின்னர் உணவு.


https://goo.gl/maps/x5bDJ6EeLb2QaXLcA
இன்றைய பயணம் சுமார் 15
 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக