ஆறுபடைவீடு பாதயாத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறுபடைவீடு பாதயாத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

05.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 59 ஆவது நாள், ஆடி 20

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  


இன்று 59 ஆவது நாள், ஆடி 20 ( 05.08.2017) செவ்வாய்க் கிழமை.

இன்று காலை 8.15 மணிக்குத் திருத்தணிகை சென்று சேர்ந்தோம்.














விடுதியில் காலை உணவு.

https://goo.gl/maps/F79LPHZA9sSnRdRK6

இன்றைய பயணம் சுமார் 26 கி.மீ.


தேவகோட்டை நகரத்தார்கள் திருப்பணி செய்த கோயில்கள் அதிகம். முருகனுக்குக் காவடி எடுத்துச் செல்லும் தொன்மையான மரபை இன்றளவும் பெரிதும் மதித்துக் காத்து வருகின்றனர்.
தேவகோட்டையிலிருந்து சென்னை வழியாகத் திருத்தணிக்கு சக்கரைக் காவடி பாதயாத்திரையை துன்மதி ஆண்டு மாசி மாதம் 32ஆவது நாள் (16.03.1982) தொடக்கி சென்னை வழியாக 330 மைல் (528 கி.மீ,) நடந்து 07.04.1982 அன்று வேல் சாத்தி வழிபாடு செய்துள்ளனர்.


இந்தக் காவடி யாத்திரை வரும் ஆண்டுகளில் தொடர வேண்டும். நமது மரபு வழிபாடுகள் காக்கப்பட வேண்டும்.

படத்தில் உள்ள அடியார்கள் யார்யாரென அடையாளம் காண முடிகிறதா?

மாலை 4:00 மணிக்கு குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு திருத்தணிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

அபிடேகம் வழிபாடு.

வழிபாட்டிற்கான ஏற்பாடுகளைக் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் செட்டியார் அவர்கள் செய்து கொடுத்தார்.

இத்துடன் குருசாமி பச்சைக்காவடி அவர்களது இரண்டாமாண்டு அறுபடைவீடு பாதயாத்திரை நிறைவடைகிறது.

ஓம் சரவணபவ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

04.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 58 ஆவது நாள், ஆடி 19

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  
சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு 
நேற்று காஞ்சிபுரம் வந்து தங்கி இருந்தோம்.

இன்று 58 ஆவது நாள், ஆடி 19 ( 04.08.2017) திங்கள் கிழமை.
அதிகாலை  2.30 மணிக்கு புறப்பட்டோம்.

வழியில் தேநீர்.







நெமிலிரோடு சேந்தமங்கலம் பாரத் வித்யா மெட்ரிகுலேசன் பள்ளியில் 9.00 மணிக்கு சிற்றுண்டி.

பள்ளி நிருவாகத்தினரும் ஆசிரியர்களும் குருசாமி பச்சைக்காவடி அவர்களை வணங்கி, விபூதி பிரசாதம்பெற்றுக் கொண்டனர்.
மதிய உணவு.
ஓய்வு.
மாலை நேரத்தில் தேநீர்.
அதன்பின்னர் யாத்திரை நிறைவு செய்வது தொடர்பான சில அறிவுரைகளை குருசாமி அவர்கள் வழங்கினார்.
இரவு வழிபாடு.
ஓய்வு.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

03.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.   சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு நேற்று “மேல்மாகூட்டுரோடு” வந்து தங்கி இருந்தோம்.
இரவு 1.00 மணிக்கு நல்ல மழை. ஒருமணி நேரம் பெய்தது.

இன்று 57 ஆவது நாள், ஆடி 18 ( 03.08.2017) ஞாயிற்றுக் கிழமை.
அதிகாலை 3.15 மணிக்கு யாத்திரை தொடங்கியது.
சாலையெங்கும் மழைநீர் நிறைந்து கிடந்தது.
மீண்டும் மழை வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் குடையை எடுத்துக்கொண்டு நடந்தோம்.
ஆனால் மழை வரவில்லை.

வழியில் சாலையோரம் அமர்ந்து உளுந்தவடையும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு நடந்தோம்.


தூசி அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அமர்ந்து காலை உணவு.







காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள விஜயலெட்சுமி திருமண மண்டபத்தை 
11.00 மணிக்கு வந்து அடைந்தோம்.
ஓய்வு.

வேலூர் அன்பர் காசிஸ்ரீ சந்திரசேகரன் அவர்கள் குருசாமிக்கும், யாத்திரிகர்களுக்கும் வஸ்திரமும் காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்த ருத்ராட்ச மாலையும் வழங்கிச் சிறப்புச் செய்தார்.  தோபா சுவாமிகளைப் பற்றி இரு நூல்கள் வழங்கினார்.
மதிய உணவு  அவரது உபயம்.
மாலை வழிபாடு.



மாலை நேர வழிபாடு முடிந்த பின்னர் சில யாத்திரிகர்கள் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சென்றனர்.










கள்ளக் கம்பரை வணங்கிக் கொண்டோம்.  திருமாலால் பூசிக்கப்பட்டவர் கள்ளக்கம்பர் என்றும் கூறினர்.  கள்ளக் கம்பரை வணங்குவோர் எதற்கும் மயங்கார் என்றனர்.  



மண்டபத்தில் தரை தளத்தில் ஒரு கல்வெட்டு இருந்தது.   கோபுரவாசல் நிலைக்கதவு அருகே இளவட்டக்கல் ஒன்று கிடந்தது.


ஐந்து தலைகளும் பத்துக்கைகளையும் உடைய பிரமனின் உருவம் ஒரு தூணில் காணப்பட்டது.  இங்குள்ள நல்லக்கம்பரைப் பிரமன் வழிபட்டதாகச் சொன்னார்கள்.  

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

சனி, 1 ஆகஸ்ட், 2020

02.08.2017 அறுபடைவீடு யாத்திரை - 56 ஆவது நாள், ஆடி 17

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.   சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு நேற்று தெள்ளாறு வந்து தங்கி இருந்தோம்.

இன்று 56 ஆவது நாள், ஆடி 17 ( 02.08.2017) சனிக் கிழமை.
இரவு நல்ல மழை.
காலை மணி 4.30க்கு யாத்திரை தொடங்கியது.
வழிநெடுக மழை பெய்து இருந்தது. வந்தவாசியைக் கடந்து செல்லும் வரை குடை பிடித்துக் கொண்டே நடந்தோம். 


 வந்தவாசி கடந்து 3 கி.மீ. சென்ற பின்னர்  சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்கில் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.







வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ.தொலைவில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில்,  மலைமேல் உள்ள அருள்மிகு ஸ்ரீ தவலகிரி ஈஸ்வரர் கோயிலைக் கண்டு வணங்கிக் கொண்டு சென்றோம்.
 https://goo.gl/maps/DjxMzSiWNHQFCdkP9



இன்னும் ஒரு 4 கி.மீ. நடந்த பின்னர் காலைச் சிற்றுண்டி. நல்ல வெயில்.  
பகல் 11.15 மணிக்கு மேல்மா கூட்டுரோடு சீனிவாசா மண்டபத்தை அடைந்தோம்.
ஓய்வு.
மதிய உணவு.
மாலை நேரம் தேநீர் சாப்பிட்ட பின்னர், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்களுடன், 
 அருகில் உள்ள சிவனடியார் ஜானகிராமன் பிரதிஷ்டை செய்திருந்து  அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனமர் அண்ணாமலேசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம்.



காசிஸ்ரீ ஜானகிராமன் அவர்கள் இந்த இடத்தில் ஆலயம் அமைந்த அற்புதமான நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினார்.  சந்நிதியின் நேர்பார்வையில் வீதி அமைந்துள்ளதையும் காட்டினார்.  


இரவு வழிபாடு.
உணவு
ஓய்வு.


https://goo.gl/maps/8c4eN8T3Ro4keCij9
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்