செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

05.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 59 ஆவது நாள், ஆடி 20

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  


இன்று 59 ஆவது நாள், ஆடி 20 ( 05.08.2017) செவ்வாய்க் கிழமை.

இன்று காலை 8.15 மணிக்குத் திருத்தணிகை சென்று சேர்ந்தோம்.














விடுதியில் காலை உணவு.

https://goo.gl/maps/F79LPHZA9sSnRdRK6

இன்றைய பயணம் சுமார் 26 கி.மீ.


தேவகோட்டை நகரத்தார்கள் திருப்பணி செய்த கோயில்கள் அதிகம். முருகனுக்குக் காவடி எடுத்துச் செல்லும் தொன்மையான மரபை இன்றளவும் பெரிதும் மதித்துக் காத்து வருகின்றனர்.
தேவகோட்டையிலிருந்து சென்னை வழியாகத் திருத்தணிக்கு சக்கரைக் காவடி பாதயாத்திரையை துன்மதி ஆண்டு மாசி மாதம் 32ஆவது நாள் (16.03.1982) தொடக்கி சென்னை வழியாக 330 மைல் (528 கி.மீ,) நடந்து 07.04.1982 அன்று வேல் சாத்தி வழிபாடு செய்துள்ளனர்.


இந்தக் காவடி யாத்திரை வரும் ஆண்டுகளில் தொடர வேண்டும். நமது மரபு வழிபாடுகள் காக்கப்பட வேண்டும்.

படத்தில் உள்ள அடியார்கள் யார்யாரென அடையாளம் காண முடிகிறதா?

மாலை 4:00 மணிக்கு குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு திருத்தணிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

அபிடேகம் வழிபாடு.

வழிபாட்டிற்கான ஏற்பாடுகளைக் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் செட்டியார் அவர்கள் செய்து கொடுத்தார்.

இத்துடன் குருசாமி பச்சைக்காவடி அவர்களது இரண்டாமாண்டு அறுபடைவீடு பாதயாத்திரை நிறைவடைகிறது.

ஓம் சரவணபவ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக