புதன், 12 ஆகஸ்ட், 2020

14.08.2014 காசி யாத்திரை - 81ஆம் நாள் - ஆடி 29

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று நாக்பூர் வந்து சேர்ந்து நகரத்தார் அன்பரின் வீட்டில் தங்கி இருந்தோம்.  

இன்று 81ஆம் நாள் - ஆடி 29 (14.08.2014) வியாழக் கிழமை.  

இன்று ஓய்வு நாள்.  யாத்திரை நிறைவுபெற இன்னும் 30 நாட்களே உள்ளன.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள், இந்த 30 நாட்களுக்கு என்னென்ன உணவுப் பொருட்கள் எவ்வளவு தேவைப்படும் என்று திட்டமதிப்பீடு செய்தார்.  அன்னதான வண்டியில் இருந்து அனைத்துப் பொருட்களையும் கீழே இறக்கி வைத்து,  அவைகளில் 30 நாட்களுக்குத் தேவைப்படும் பொருட்களைப் பார்த்து வாங்கி வைத்துக் கொண்டார்.


குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக