வியாழன், 6 ஆகஸ்ட், 2020

07.08.2014 காசி பாதயாத்திரை - 74ஆம் நாள், ஆடி 22

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.   இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று முன்தினம் அடிலாபாத் அருகில் மாவாலா என்ற ஊரின் எல்லையில் உள்ள லெட்சுமி கல்யாண மண்டபம் வந்து தங்கி இருந்தோம்.  நேற்று முழு ஓய்வு.  நேற்று முழுவதும் மழை இல்லை.

இன்று 74ஆம் நாள் - ஆடி 22 (07.08.2014) வியாழக் கிழமை. 

இன்று தினவழிபாட்டை முடித்துக் கொண்டு அதிகாலை 2.30 மணிக்கு மாவாலா லெட்சுமி கல்யாண மண்டபத்தில் இருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.

3.42 am

6.21 am

வழியில் தேநீர் ,



சாலையோரம் போரஜ் (BHORAJ) பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
6.33 am
6.53  am
6.55 am
6.56 am
7.19 am

7.24 am
காலை 7.20 மணிக்கு பைப்பர்வாடா (Piperwada)  என்ற ஊர் வழியாகச் சென்றோம்.  சாலை விரிவாக்கத்திற்காகச் சாலையோரம் இருந்த இராமர்கோயிலை அகற்றிச் சற்று தள்ளி வைத்துள்ளனர்.  கோயிலை முழுவதுமாகப் புதிதாகக் கட்டி முடித்துள்ளனர்.  யாத்திரிகர் அனைவரும் கோயில் முன் நின்று வணங்கிக் கொண்டோம்.  
https://goo.gl/maps/xbiTtZMZXT5SQYXz5



கோயிலில் காலை வழிபாடு முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அன்பர் ஒருவர் யாத்திரிகர்களைக் கண்டு வரவேற்றார்.   கோயிலில் தங்கிச் செல்வதற்கான வசதிகள் அனைத்தும் உள்ளன என்றார்.    ஆனால் திட்டமிட்டபடி யாத்திரிர்கள் பாட்டன்பூரி செல்ல வேண்டியுள்ளது எனக்கூறி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
7.32 am
8.02 am

சுங்கச்சாவடி அருகே சாலையோரம் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டோம்.

8.05 am
தமிழ்நாட்டிலிருந்து வரும் லாரி ஓட்டுநர் ஒருவர் வண்டியை நிறுத்தி,  இந்த வழித்தடத்தில் யாத்திரிகளை இரண்டுமுறை பார்த்து விட்டதாகக் கூறி நலம் விசாரித்தார்.
8.20 am
8.21 am
வழியில் மண்டகாடா என்ற சிற்றாறு ஓடியது.  மண்டகாடா ( MandaGada river) ஆற்றின் குறுக்கே செல்லும் போது, சில யாத்திரிகர்கள் ஆற்றினை வணங்கிக் கொண்டனர்.  மண்டகாடு அல்லது மண்டைக்காடு என்ற இந்தப் பெயர் காடுமண்டிய இடம் என்ற காரணப்பெயரைக் கொண்டதா? என்ற ஐயம் எனக்கு.

8.29 am
8.38 am
9.01 am
9.03 am
9.04 am
அடுத்து சுமார் 2 கி.மீ. தொலைவில் பென்கங்கா (Pen Ganga River) என்ற ஆறு ஓடுகிறது.

இந்த ஆற்றைக் கடந்ததும் மகாராட்டிரம் மாநிலம் ஆரம்பம் ஆகிறது.  ஆற்றின் தென்பகுதியில் தெலுங்கானாவும் வடபகுதியில் மகாராஷ்டிராவும் உள்ளன.

சில அடியார்கள் தரையில் விழுந்து ஆற்றையும் தெலுங்கானாவையும் வணங்கிக் கொண்டனர்.


மகாராஷ்டிர எல்லையில் இருந்து வந்து ஆற்றுக்குள் லாரிகளை நிறுத்தி மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.     ஆற்றில் களிமண் ஆறு போல் ஓடிக் காய்ந்து பாறையாக மாறியுள்ளதோ என்று கருதும்படியாக, இங்கே ஆற்றின் கீழே காணப்பட்ட பாறைகள் விசித்திரமாக அமைந்து இருந்தன. 
9.07 am
9.21 am

பென்கங்கா ஆற்றின் பாலத்தைக் கடந்ததும் மகாராட்டிரம் மாநில எல்லை ஆரம்பம் ஆனது.   அந்த  இடத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக இருந்தது.  எந்தவொரு வாகனமும் எளிதில் கடந்து செல்ல முடியாதுபடி பெரும் பெரும் பள்ளங்கள் சாலையின் நடுவே இருந்தன.  

9.21 am
9.32 am
வழிநெடுகிலும் சாலையோரம் முட்செடிகளும் மண்டி இருந்தன.  சாலையில் நடப்பது சிரம்மமாகவும் பாதுகாப்பு அற்றதாகவும் இருந்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.    சேறும் சகதியுமாகச் சாலை இருந்தது.  சாலையில் நடந்து செல்வதே மிகவும் சிரமமாக இருந்தது.  

10.37 am

கடும் வெயில்.   உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது.   காலை உணவு நேரத்தில், அன்னதான வண்டியில் இருந்து குடைகளை எடுத்து வைத்துக் கொள்ளாத காரணத்தினால் யாத்திரிகர் அனைவரும் வெயிலில் நடந்து சென்றனர். 

10.43 am
பிம்பல்குடி என்ற ஊர் வழியாக காலை மணி 10.40 அளவில் பாட்டன்பூரி என்ற ஊரில் உள்ள ராமர்மந்திர் வந்து சேர்ந்து தங்கினோம்.  இங்குள்ள மின்மோட்டாரில் யாத்திரிகர் பலரும் அலுப்புத் தீரக் குளித்தனர்.
இந்தக் கோயிலில் மாலைநேரத்தில் ஊரார் பலரும் ஒன்றுகூடி பஜனை செய்து வழிபாடு செய்தனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஊராரை ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.

10.45 am

மதிய உணவு.

ஓய்வு.

இந்த ஊரில் உள்ள தமிழ் அன்பர் ஒருவர் வந்து அடியார்களை வரவேற்று உதவிகள் செய்து கொடுத்தார்.

https://goo.gl/maps/qvaadJucTxtEXGY68

இன்றைய பயணம் சுமார் 34 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக