அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி,
1) பழமுதிர்சோலை
2) திருப்பரங்குன்றம்
3)திருச்செந்தூர்
4) பழனி
5) சுவாமிமலை
ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.
வருடத்திற்கு 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது திருத்தணி மலை. இந்த 365 படிகள் வழியாக, நேற்று மாலை நேரத்தில்
6) திருத்தணிகையில்
அருள்மிகு வள்ளி உடனாய முருகப்பெருமானை வழிபடும் பேறு கிடைக்கப் பெற்றோம்.
அறுபடைவீடு பாதயாத்திரை தொடங்கி இன்று 60 ஆவது நாள், ஆடி 21 ( 06.08.2017) புதன் கிழமை.
யாத்திரிகர் அனைவரும் விடுதியில் தங்கியிருந்தனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களைக் கண்டு ஆசிபெறுவதற்காக நகரத்தார் பெருமக்கள் அதிமாக வந்திருந்தனர். யாத்திரிகர்களின் குடும்பத்தினர்களும் வந்திருந்தனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார்.
இத்துடன் வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரைப் பயணம் அருள்மிகு கற்பகவிநாயகர் திருவருளாலும்,
அருள்மிகு அறுபடைவீடு முருகப்பெருமான் திருவருளாலும், அவரவர் குலதெய்வங்கள் வழிபடுதெய்வங்கள் மற்றும் இஷ்ட தெய்வங்களின் திருவருளாலும் இனிதே நிறைவு பெற்றது.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக