காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று முன்தினம் (20.08.2014) கோரக்பூர் என்ற ஊர் வந்து சேர்ந்து இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம்.
இன்று 90ஆம் நாள் - ஆவணி 7 (23.08.2014) சனிக் கிழமை. அதிகாலை 3.00 மணிக்கு கோரக்பூரில் இருந்து புறப்பட்டோம்.
5.20 am
6.14 am
காலை மணி 6.15க்கு வெயின்கங்கா (bainganga https://en.wikipedia.org/wiki/Wainganga_River) நதிக்கரையில் உள்ள சாப்பரா (Chhapara) நகருக்கு வந்து சேர்ந்தோம்.
கோரக்பூர் வாழ் இளைஞர்கள் சாப்பரா வந்திருந்து நதிக்கரையில் நின்று யாத்திரிகர்களை வரவேற்றனர்.
6.17 am
இரும்பு சிமிண்ட் பயன்படுத்தப்படாமல், செங்கலும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பாலம் ஒன்று இருந்தது.
6.26 am
சாப்பரா (Chhapara) நகரில் வசிக்கும் கோரக்பூர் கிராமத்தினரின் உறவினர்கள் சாலையோரம் வந்து நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களை வரவேற்றனர்.
யாத்திரிகர்களை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
6.41 am
அவரது இல்லத்தில் ரொட்டியும் தேநீரும் கொடுத்து உபசரித்தனர். வழிச் செலவிற்குச் சிறிது பொருளுதவியும் செய்தனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்தக் குடும்பத்தினர் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
7.04 am
7.10 am
காலை 7.05 அளவில் இங்கிருந்து மதை கிராமம் நோக்கிப் புறப்பட்டோம்.
7.15 am
7.24 am
சாப்பரா (Chhapara) புறவழிச்சாலை வரை அந்த இளைஞர்கள் வந்து நின்று வழியனுப்பி வைத்தனர். இங்கிருந்து மலைகளின் நடுவே பாதை அமைந்து இருந்தது.
8.20 am
8.56 am
காலை 9.00 மணிக்கு மலைகளின் நடுவே அமைந்துள்ள பஞ்சாரிமாதா கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.
https://goo.gl/maps/G6MSuo5frLn6REeT8
கோரக்பூர் கிராம இளைஞர்கள் மூவரும் இந்தக் கோயிலுக்கும் வந்து சேர்ந்தனர்.
இங்கு மாதா வழிபாட்டுடன், இராம லெட்சுமணர்களை அனுமன் தன் தோளில் தூக்கிச் செல்வது போன்ற சிற்பமும் வழிபாட்டில் உள்ளது.
9.11 am
இங்கு யாத்திரிகர்களும் வாகனஓட்டிகளும் தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. சுத்தமான குடிநீர் வசதியும் உள்ளது.
9.48 am
சிறிது தூரத்தில் சிறியதொரு காட்டாறு ஓடுகிறது.
10.30 am
காலை 11.00 மணி அளவில் மதை என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்து இங்கள்ள பள்ளிக்கூடத்தில் தங்கி இருந்தோம்.
https://goo.gl/maps/mcyucn9XbofGQbqo8
இன்றைய பயணம் சுமார் 32 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக