வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

29.08.2015 காசி யாத்திரை (கயா வழிபாடு)

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 12ஆவது வருட இராமேசுரம் காசி நிறைவு பாத யாத்திரை.


 29.08.2015 காசி யாத்திரை (கயா வழிபாடு)























இறைவனது அளவில்லாக் கருணையாலும், வழிபடுதெய்வங்களின்  திருவருளாலும், குருசாமி பச்சைக்காவடி அவர்களது நல்லாசியாலும் காசிக்குப் பாதயாத்திரை சென்றுவழிபடும் பெறுதற்கரிய பேறுகிடைக்கப் பெற்றேன்.  பொன்னமராவதி வலையபட்டியைச் சேர்ந்த குருசாமி காசிஸ்ரீ. பச்சைக்காவடி அவர்கள் வருடந்தோறும் 20 யாத்திரிகளை அழைத்துக் கொண்டு இராமேச்சுரத்திலிருந்து பாதயாத்திரையாகக் காசிக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.  இவரது  கருணையினால் அடியேனும் அவரது 11ஆம் ஆண்டு பாதயாத்திரையில் அவர்களுடன் சேர்ந்து 26.05.2014 அன்று இராமேச்சுரத்தில் முறைப்படி வழிபட்டு அக்னி தீர்த்தத்தில் மண் எடுத்துக் கொண்டு பாதயாத்திரை புறப்பட்டோம்.  2510கி.மீ. பயணித்து 12.09.2014 அன்று காசிமாநகர் சென்று முறைப்படி வழிபட்டோம்.  திரிவேணீ சங்கமத்திலும் தீர்த்தமாடி வழிபட்டோம்.  கயா சென்று முன்னோர்களை முறைப்படி வழிபட்டோம்.

குருசாமி காசிஸ்ரீ. பச்சைக்காவடி அவர்கள்  அவரது 12ஆம் ஆண்டு (நிறைவு) யாத்திரையை 25.04.2015 அன்று இராமேச்சுரத்திலிருந்து 30 யாத்திரிகர்களுடன் துவக்கினார்.   அடியேனும் தொடர்வண்டியில் நாக்பூர் சென்று 19.07.2015 அன்று இந்தப் புனித பாதயாத்திரையில் நாக்பூரிலிருந்து கலந்து கொண்டு 

25.08.2015 அன்று காசிமாநகர் சென்று சேர்ந்து வழிபட்டோம்.


29.08.2015 அன்று கயா சென்று வழிபட்டோம்.

புனித விஷ்ணு கயாவில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது சிறப்பு.  காயவில் பித்ரு தர்பணத்தைப் பண்டாக்கள் தான் செய்து வைக்கிறார்கள்.   தர்பண காரியங்கள் செய்வதற்காக தென்னிந்தியருக்கு தனி வசதி உள்ளது.   உடிப்பி பட்கள் செய்து வைக்கிறார்கள். தென்னிந்தியருக்கு ஏற்பாடு செய்யும் பண்டாக்கள் தமிழும் பேசுகிறார்கள். 

பலரும் இங்கிருந்து புறப்பட்டு ஹரித்வார் வழியாக பத்ரி செல்கின்றனர்.  அங்கும் அலக்னந்தா கரையில் ஸ்ராத்தம் செய்கின்றனர். பிரம்மகபாலத்தில் பிண்டம் இடுகின்றனர்.  கயாவிலும் பத்ரியிலும் ஸ்ராத்தம் செய்தபோதும்,  வருடாவரும் செய்யக்கூடிய வர்ஷச்ராத்தத்தை விட்டுவிடாமல் செய்ய வேண்டும்.


பல்குனி யாறு  -  தர்பணம் செய்யும் இடத்தில் தமிழர் கூட்டம் அதிகம் இருந்தது .

கயாவில் தர்ப்பணம் செய்யும்போது அம்மாவுக்காகத் தனியாக 12 பிண்டங்கள் வைக்கவேண்டும்.   அப்பொழுது தாய் தனது குழந்தைக்காக என்னென்ன வேதனைகளை அனுவித்திருப்பாள் என்று விவரித்து,  தனக்காகப் பட்ட ஒவ்வொரு வேதனைக்கும் ஒவ்வொரு பிண்டம் வைக்கும்போதும் நம் விழிகளில் தானாகவே நீர் பெருக்கெடுக்கும்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக