காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று கீளாப்பூர் என்ற ஊரில் உள்ள செகதாம்பாள் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம். நேற்று முழுவதும் மழை இல்லை , நல்ல வெயில்.
இன்று 76ஆம் நாள் - ஆடி 24 (09.08.2014) சனிக் கிழமை.
இன்றுதினவழிபாட்டை முடித்துக் கொண்டு கீளாப்பூர் செகதாம்பாள் கோயிலில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு யாத்திரையை தொடர்ந்தோம்.
வழியில் மழை தூர ஆரம்பித்து. காலை 6.00 மணிவரை மழை தூரிக்கொண்டே இருந்தது. குடை எடுத்துக் கொள்ளாத காரணத்தால் யாத்திரிகர் அனைவரும் மழையில் நனைந்தபடியே நடந்தோம்.
வழியில் காலை 7.00 மணிக்கு சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீர் சாப்பிட்டுக் கொண்டு நடையைத் தொடர்ந்தோம்.
7.45 am
கரன்ஜி என்ற ஊரின் வழியாகச் செல்லும் போது மேம்பாலம் வழியாகக் கடந்து சென்றோம். மேம்பாலத்தைக் கடந்தவுடன் சாலையோரம் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு.
சிறிது நேரம் ஓய்வு.
வாட்கியில் ஸ்ரீ ராமர் கோயில் -
வாட்கி என்ற ஊர் சுமார் 4 கி.மீ தொலைவில் இருக்கும்போது, மாலை 4.00 மணிக்கு சாலையோரம் உள்ள ராமர் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கட்டிடப் பணியை மேற்பார்த்துக் கொள்பவர் தங்குவதற்கென ஒரு அறை மட்டுமே இருந்தது. அதில் யாத்திரிகர்கள் அனைவரும் தங்கிக் கொண்டோம்.
06.07 pm
மிகவும் பழமையான ஆஞ்சநேயர் சிற்பம் ஒன்று வழிபாட்டில் இருந்தது. வாட்கி ஸ்ரீராமர் கோயில் இருப்பிடம் - https://goo.gl/maps/N71cDMD5kLeMDbZo6
இரவு உணவு.
இரவில் மின்சாரமும் நின்றுவிட்டது. அதிகதொலைவு நடந்து வந்த காரணத்தினால் அனைவரும் அயர்ந்து தூங்கிவிட்டோம்.
https://goo.gl/maps/Z3ndpccYmQZVGcKH7
இன்றைய பயணதூரம் சுமார் 37 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக