செவ்வாய், 30 ஜூன், 2020

01.07.2017 பயணக் கட்டுரை - அறுபடைவீடு பாதயாத்திரை - 24ஆவது நாள், ஆனி 17

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  24ஆவது நாள், ஆனி 17 (01.07.2017) சனிக் கிழமை.
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று கல்குறிச்சி வந்து சேர்ந்து இருந்தோம்.

வெயில் கடுமையாக இருக்கின்ற காரணத்தால் வெயிலுக்கு முந்திப் பாதயாத்திரை சென்று விடவேண்டும் என்று யாத்திரிகர்கள் கருதினார்.  எனவே கல்குறிச்சியில் இருந்து இன்று அதிகாலை மணி 2:10 க்கு வழக்கமான தினசரி வழிபாட்டிற்குப் பின்னர் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு யாத்திரை புறப்பட்டோம்.  



பாரபத்தி பெருமாள் கோயில் வளாகத்தில் காலை மணி 6.40 மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

கோயில் வளாகத்தில் இளவட்டக்கல் மூன்று கிடந்தன.  கோயில் வளாகத்தை மிகவும் சுத்தமாக வைத்திருந்தனர்.





எலியார்பத்தி வழியாகக் காலை 8.00 மணிக்கு வலையன்குளம் சமுதாயக்கூடம் வந்து சேர்ந்தோம் .
வலையங்குளம் அன்பர்கள் திரு. மாரியப்பன் அவர்களும், திரு. பழனியப்பன் அவர்களும் யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.
வலையங்குளம் சமுதாயக்கூடத்தில் தங்கல் .
காலை உணவு.
ஓய்வு .


மாலை மணி 5.30 அளவில் அன்பர் திரு பழனியப்பன் அவர்களின் அழைப்பின் பேரில் குருசாமி அவர்கள் 7 யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு அவரது இல்லத்திற்குச் சென்றார்.
அங்கே யாத்திரிகர்களுக்குப் பாதபூஜை செய்து பொன்னாடை போர்த்தி மலர்தூவி வரவேற்றனர் .  ரெட்டியும் தேநீரும் வழங்கி உபசரித்தனர்.  அவர்களது இல்லத்தில் குருசாமி அவர்கள் வழிபாடு செய்து அந்தக் குடும்பத்தினரை ஆசிர்வதித்தார்.

மாலை மணி 6.15 அளவில் யாத்திரிகர் பலரும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டோம்.  ஊரார் மிகவும் பயபக்தியுடன் இங்கே வழிபாடு செய்கின்றனர்.  கோயில் எல்லையில் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.  இந்தக் கோயில் வளாக எல்லையில்கூட  யாரும் செருப்பு அணிந்து செல்வதில்லை.   கோயிலுக்குள்ளே பெண்கள் செல்லவதில்லை.  சிவலிங்க வடிவில் பெருமாளை எழுந்தருளி யுள்ளார். https://temples-kalairajan.blogspot.com/2018/07/blog-post.html  மதுரை - அருப்புக்கோட்டை சாலை வழியாகத் தூத்துக்குடி திருச்செந்தூர் மற்றும் பிற ஊர்களுக்குப் பயணம் செல்வோர் அவசியம் வணக்கிச் செல்ல வேண்டிய கோயில்.


https://goo.gl/maps/EBYpho3iEbKGk98T8
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக